பக்கம்:தமிழ் அங்காடி.pdf/170

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168  தமிழ் அங்காடி


விதமாக எண்ணிக் கொண்டிருந்த எனக்கு ஒரு நாள் நிகழ்ச்சி உருக்கமாக இருந்தது.

சுமார் எழுபத்தைந்து வயதுடைய ஒரு கிழவனும், கீரைத்தண்டுபோல் துவள்கிற பத்து வயதுடைய ஒரு பையனும் கமலநாதன் வீட்டுத் தெரு வாசற்படியில் நின்று கொண்டிருந்தார்கள். தெருக் குறட்டில் சேகர் மூன்று சக்கர சைக்கிள் விட்டுக்கொண்டிருந்தான். சைக்கிளில் சேகருக்குப் பின்னால் கமலா அட்டகாசமாக உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

கிழவனோடு வந்த பையன் மணியன் சிறார்களின் சைக்கிள் சவாரியை மிகவும் ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். தனக்கு அப்படி ஒரு சைக்கிள் கிடைக்கக் கூடாதா என்பது அவனது ஏக்கமாய் இருக்கலாம்.

மணியனின் ஏக்கம், சேகர் கமலா ஆகிய இருவரின் களிப்பையும் கர்வத்தையும் மிகுதிப்படுத்தியது. 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்’ என்பது சான்றோர் வாக்கு. வயது வந்தவர்களிடத்திலேயே இந்தப் பண்பு இல்லையே. தம்மைப்போல் பிறரும் நன்றாக இருக்கக்கூடாது என்று எண்ணுகிறார்களே. சிறுவர்களிடத்தில் கேட்கவாவேண்டும்! சைகிள் இல்லாத சிறுவர்களது ஏக்கத்தின் எதிரிலே தாங்கள் மட்டும் சைக்கிள் விடுவதிலேதானே குழந்தை உலகத்தின் இரட்டிப்பு மகிழ்ச்சியின் மறைபொருள் (இரகசியம்) அடங்கியிருக்கிறது

இதைப் பார்த்துக் கொண்டிருந்த கிழவனது பார்வையிலோ ஏமாற்றமும் எரிச்சலும் காணப்பட்டன. அந்த சைக்கிளைப் பிடுங்கித் தன் பேரன் மணியனுக்குக் கொடுத்துவிடத் துடிப்பவன்போல் தோற்றமளித்தான் அவன். அது முடியுமா? தொட்டாவது பார்ப்பதற்காகச் சைக்கிளை நெருங்கிக் கொண்டிருந்த மணியனை இழுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/170&oldid=1204272" இலிருந்து மீள்விக்கப்பட்டது