பக்கம்:தமிழ் அங்காடி.pdf/184

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182  தமிழ் அங்காடி



வாழ்க்கை வரலாற்றுப் பகுதி

14. சிவம் தந்த சிறப்புக் கொடை

சிவப்பிரகாசம் என்னும் முழுப் பெயரை உடைய கவிஞர் புதுவைச் சிவத்தோடு கொண்டிருந்த தொடர்பைப் பற்றிய கட்டுரை கேட்கப் பெற்றது. எனக்குச் சிவம் தந்த சிறப்பைக் கூறுமுன் சில அடிப்படைச் செய்திகளைக் கூறுகின்றேன்:-

1942 ஆம் ஆண்டிலிருந்து புதுவைச் சிவத்தோடு எனக்கு நட்பு உண்டு. அவர் ஞாயிறு நூற் பதிப்புக் கழகம் என்னும் அமைப்பின் பேரால் சந்தானம் அச்சகத்தில் நூல்கள் அச்சிடச் செய்வார். யானும் நூல்கள் அச்சிட ஆங்குச் சென்ற போதெல்லாம் பல செய்திகள் பற்றிக் கலந்து பேசுவோம்.

வீட்டுக்குச் சென்றதில்லை. தெருவில் - வழியில் கண்ட போதெல்லாம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்போம்.

புதுவை . சொசியத்தே பள்ளியில் நடைபெறும் விழாக்கட்கு அழைப்பு வரும் - செல்வதுண்டு. இவர் அங்கு ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒரு விழாவில், அப்போது முதலமைச்சராயிருந்த மாண்புமிகு வேங்கட சுப்பா ரெட்டியார் அவர்களும் கல்வியமைச்சராயிருந்த மாண்புமிகு காங்கேயன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். ஊதியம் மிகவும் குறைவு என்பதைச் சுட்டப் பின்வரும் நிகழ்ச்சியொன்றைச் சிவம் சொன்னார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/184&oldid=1204305" இலிருந்து மீள்விக்கப்பட்டது