பக்கம்:தமிழ் அங்காடி.pdf/187

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  185


குடி+இல் = குடில், குடி இருக்கும் இடம் குடில் ஆகும் - என்றெல்லாம் என் சொற்பொழிவில் குறிப்பிட்டேன்.

இந்த நிகழ்ச்சியைக் 'குடிசை' என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையாக எழுதித் 'தமிழ்ச் செல்வி' என்னும் திங்கள் இதழில் வெளிவரச் செய்தேன். பின்னர் இந்தக் கட்டுரையோடு வேறு சில கட்டுரைகளையும் சேர்த்து ‘வாழும் வழி’ என்னும் பெயரில் ஒரு நூலாக்கி வெளியிட்டேன். இந்நூல் 1972 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பாட நூலாக்கப் பெற்றது. எனக்கு இது புதுவைச் சிவம் தந்த சிறப்பான அருட் கொடையாகும்.

பின்னர், பெரியார் நாதமுனி தம் மூன்றாம் மகள் திருமணத்தை முற்றிலும் தமிழ் மணமாகவே எனது தலைமையில் நடக்கச் செய்தார். யார் எவ்வாறு விரும்புகிறார்களோ அவ்வாறு திருமணம் செய்து வைப்பது எனது பணி.

சிவம் தந்த அடுத்த சிறப்புக்கொடை ஒன்று வருமாறு:வளவனூருக்கு அண்மையில் ஒட்டேரிப்பாளையம் என்னும் சிற்றுார் இருப்பதைப் பலரும் அறிந்திருக்கலாம். எலும்பு முரிவுக்கு அங்கே மருத்துவம் செய்வதையும் பலரும் தெரிந்திருக்கலாம். அந்த ஊரில் ஒருவர் தமிழ்த் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரும்பினார்; புதுவைச் சிவத்தின் உதவியை நாடினார். சிவன் முன்போலவே என்னிடம் அழைத்து வந்து ஏற்பாடு செய்தார்.

திருமண நாள் காலையில் நானும் சிவனும் ஒட்டேரிப் பாளையாம் சென்றடைந்தோம். சிவத்தின் துணையுடன் திருமணத்தைத் தொடங்கி நடத்தி வைத்தேன். மங்கல நாண் (தாலி) சூட்டிய பிறகு சிலர் வாழ்த்துரை வழங்கினர். அவர்களுள் ஒருவர், மிகவும் தரக் குறைவாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/187&oldid=1204316" இலிருந்து மீள்விக்கப்பட்டது