பக்கம்:தமிழ் அங்காடி.pdf/190

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188  தமிழ் அங்காடி


விடுகிறேன்” என்று கூறிச் சென்று அவ்வாறே வாங்கி வந்து கொடுத்தார். நான் நடக்க முடியாதவன் ஆதலினால் இருவரும் சேர்ந்து செல்லவில்லை. வாங்கி வந்த சிற்றுண்டியை எங்களை அழைத்து வந்தவர்கட்குத் தெரியாமல் திருட்டுப்பையன் போல் யான் மெதுவாகத்தின்று வைத்தேன். இது தொடர்பாக இருவரும் பேசிப் பேசிச் சிரித்துத் தீர்த்தோம். ஒருவாறு சொற்பொழிவை முடித்துக் கொண்டு புதுவை வந்து சேர்ந்தோம்.

இவ்வாறு புதுவைச் சிவத்தோடு எனக்கு எவ்வளவோ தொடர்பு உண்டு. அவர் இந்திய நாடாளுமன்றத்தின் உறுப்பினராக (M.P.) அமர்ந்து ஐந்தாண்டுகள் பணி புரிந்தார். செம்மையுடையவராய் வாழ்ந்து வந்த அவர் பிற்காலத்தில் பெரிய பதவிகளைப் பெற்ற போதெல்லாம் யான் உள்ளங் குளிர்ந்து மகிழ்வு எய்தினேன்.

யான், “தமிழ் நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்" (Encyclopaedia of Tamil Anthology) என்னும் பெயரில் ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஒரு நூல் எழுதி முடித்துவிட்டேன். இரண்டு தொகுதிகள் கொண்டது இந்நூல். முதல் தொகுதி அச்சடித்து வெளியிடப்பட்டு விட்டது. இரண்டாம் தொகுதி அச்சேற ஆயத்தமாயிருக்கிறது. இப் பெரிய நூலில், தோற்றம் (சுமார்) இரண்டாயிரம் தொகை நூல்களைப் பற்றி எழுதியுள்ளேன். இந்நூலின் 'இருபதாம் நூற்றாண்டுத் தொகை நூல்கள்’ என்னும் பிரிவில், புதுவைச் சிவத்தின் ‘தமிழ் இசைப் பாடல்கள்” என்னும் பாடல் தொகுப்பு நூலைப் பற்றி எழுதியுள்ளேன். யான் அவருக்குத் தந்துள்ள நன்றிக் காணிக்கையாகும் இது.

சிறந்த தமிழ் அறிஞரும் பொதுத் தொண்டரும் ஆகிய புதுவைச் சிவத்துடன் நடைபெற்ற இறுதித் தொடர்பு எவ்வாறு தெரியுமா? யான் இப்போது புதுவை நகரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/190&oldid=1204325" இலிருந்து மீள்விக்கப்பட்டது