பக்கம்:தமிழ் அங்காடி.pdf/197

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  195


ஐயா அவர்கள், ஒரு வாரத்திற்குக்குப் பதினொரு(11) மணி நேரம் வகுப்பெடுப்பதாக என்னிடம் அறிவித்தபோது யான் மிகவும் வியப்படைந்தேன். தலைவரும் வகுப்பு எடுத்தால் தான் மாணக்கருக்கும் நிறுவன அமைப்புக்கும் இடையே நல்ல தொடர்பு இருக்கும் என ஐயா என்னிடம் கூறினார். எனது நூல் ஒன்று, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பாடம் ஆகிய பேறு பெற்றது.

ஓய்வுக்குப் பின்னர், காரைக்குடியில் தமிழியக்க நிறுவனம் அமைத்துத் தமிழ் வளர்ச்சிப் பணியாற்றி வந்தார், இடையிலே மதுரைகாமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பேற்றுப் பேரும் புகழும் பெற்றார்.

தொல்காப்பியத்தில் வல்லவரான ஐயா, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்காகத் தொல்காப்பிய ஆய்வு செய்து அளித்தார்.

திருச்சிப் பெரியார் முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் அமைத்துள்ள தமிழகப் புலவர் குழுவின் தலைவராக மாணிக்கம் ஐயா அமர்த்தப் பெற்று வழி நடத்தி வந்தார். புலவர் குழுவின் வெள்ளி விழா 1983-அக்டோபரில் சேலம் தமிழ்ச் சங்கத்தாரால் நடத்தப் பெற்றது. அவ்விழாவில் எனக்குத் 'தமிழ்ச் சான்றோர்’ என்ற பட்டமும் பதக்கமும் பொன்னாடையும் அளித்தார்கள். அதற்காக அவ்விழாவிற்கு யானும் போயிருந்தேன். அங்கே நடந்த நிகழ்ச்சி ஒன்றைக் கூறுவேன்:

விழாவின் முதல்நாள் மாலைக் கூட்டத்திற்கு மாணிக்கம் ஐயா தலைமை தாங்கினார். கூட்டத்தில் சேலத்தார் ஒருவர் சொற்பொழிவாற்றிய போது பின்வருமாறு ஒரு கருத்து மொழிந்தார். அதாவது:- இரண்டு தமிழ்ப் புலவர்களை இரவில் ஓர் அறையில் அடைத்துப் பூட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/197&oldid=1204338" இலிருந்து மீள்விக்கப்பட்டது