பக்கம்:தமிழ் அங்காடி.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



18 தமிழ் அங்காடி


தொலைபேசியில் பேசிக்கொண்டனர். இவர்களின் பேச்சு தான் உலகில் தொலைபேசியின் முதல் பேச்சு எனச் சொல்லப்படுகிறது.

போட்டி வழக்கு

உலகில் ஒரே விதமான செயலை, ஒருவரை ஒருவர் அறியாமல் பலர் செய்வதுண்டு. இதை, என்னைப் பார்த்துத் தான் நீ செய்தாய் என்று ஒருவரோடு ஒருவர் போட்டியிடுவதும், வழக்கு மன்றம் வரையும் செல்வதும் உண்டு.

இந்தத் தொல்லை கிரகாம் பெல்லுக்கும் நேர்ந்தது. தொலைபேசி போன்ற கருவியை வேறு சிலரும் ஒரளவு படைத்திருந்தனர். எனவே, தொலைபேசி கண்டுபிடித்த பெருமையும் உரிமையும் எனக்கே உரியன என ஒருவருக்கொருவர் வாதிட்டனர். வழக்குகளும் நடந்தன. ஆனால், இறுதியாக, தொலைபேசி தொடர்பான காப்புரிமை கிரகாம் பெல்லுக்கே கிடைத்தது.

அதாவது, இந்த முயற்சியில் கிரகாம் பெல் முந்திக் கொண்டுள்ளார் என்பது புலனாகிறது. அதனால் முதல் பெருமை இவருக்கும் இவரது தொலைபேசிக் கருவிக்குமே கிடைத்தது.

பிலடெல்பியா என்னும் இடத்தில் 1876 ஆம் ஆண்டு கிரகாம்பெல்லின் தொலைபேசி பொது மக்களின் பார்வைக்கு வைக்கும் பேறு பெற்றது. இவருக்குப் பேரும் புகழும் பெரிய அளவில் வந்து குவிந்தன.

மக்கள் பண்பு

வியத்தகு கருவியைக் கண்டுபிடித்து உலகுக்கு அளித்த கிரகாம் பெல் 1922 ஆம் ஆண்டு இறுதி எய்தினார். இவருக்கு அஞ்சலி செலுத்தும் முறையில், அமெரிக்காவில் உள்ள தொலைபேசிகள் எல்லாம், ஒரு மணித்துளி (நிமிட)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/20&oldid=1203034" இலிருந்து மீள்விக்கப்பட்டது