பக்கம்:தமிழ் அங்காடி.pdf/200

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198  தமிழ் அங்காடி


“எமக்கென்ய தென்னோ எனைமொழி யாளர்
தமக்கும் பழந்தாய் தமிழ்"

என்பது பாடல். இந்தக் கருத்தை உறுதி செய்யும் சான்று ஒன்று காண்பாம்:

தலை சிறந்த இலங்கைப் பேரறிஞரான ஞானப் பிரகாச அடிகளார் (Rev. S. Gnana Prakasar O.M.I.) ‘சொற் பிறப்பு - ஒப்பியல் தமிழ் அகராதி’ (An Etymological and Comparative Lexicon of The Tamil Language) என்னும் ஓர் அகராதி வெளியிட்டுள்ளார். அதன் முன்னுரையில் பின்வரும் கருத்துகள் கூறியுள்ளார்:

“தமிழ்ச் சொற்கள் முதல் முதல் மக்களினத்தில் மொழி தோன்றத் தொடங்கிய காலத்தில் எழுந்த சொல்லொலிகளை அடிப்படையாகக் கொண்டவை. தமிழ்ச் சொற்களால் உணர்த்தப்படும் கருத்துகள், மக்களினத்தின் பொதுப்பண்பைக் குறிக்கும் அடிப்படையாகும். எனவே, கூர்ந்து ஆராயின், தமிழ்ச் சொற்களின் வேரிலிருந்தே உலக மொழிகளின் சொற்கள் தோன்றிப் பல்வேறு வடிவங்கொண்டன என்பது புலப்படும்"-இவ்வாறு ஞானப்பிரகாச அடிகளார் சொல்லியிருப்பதற்குமேல் இன்னும் என்ன சொல்லவேண்டும்!

"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா"

என்றார் பாரதியார்.

"சொல்லில் உயர்வு தொழுதமிழ் என்றானே
பள்ளியுள் அஃதுண்டோ பார்” (433)

என்பது மாணிக்கக் குறள். இவ்வாறெல்லாம் தமிழின் நிலைபற்றியும் அதை உயர்த்தி வளர்க்கவேண்டிய கடமை குறித்தும் மாணிக்கக் குறள் நிரம்புக் கூறுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/200&oldid=1203085" இலிருந்து மீள்விக்கப்பட்டது