பக்கம்:தமிழ் அங்காடி.pdf/201

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  199


மன்பதைச் சீர்திருத்தம்

திருவள்ளுவரின் குறள் தமிழியக்கம் கூறவில்லை - அன்றைக்குக் கூற வேண்டிய நிலையில் தமிழ் இல்லை. ஆனால் மன்பதை கேடுற்றிருப்பதால் மன்பதைச் சீர்திருத்தத்தை வள்ளுவர் வலியுறுத்தினார். மக்கள் மந்தை இன்னும் திருந்தாததால், மாணிக்கனாரும் சீர்திருத்தங்கள் சில வலியுறுத்தியுள்ளார். புகை பிடித்தல், கள்ளுண்ணல், சாதி வேறுபாடு, குருட்டு மூட நம்பிக்கை முதலியவற்றைச் சாடியுள்ளார்:

“புற்று வளர்க்கும் புகைப்பிடிப்பு விட்டக்கால்
வற்றுமே நெஞ்சு வலி” (449)
"உடலே சிறந்த உடைமை மதுவின்
குடமாதல் அன்புக் கொலை" (453)
"பார்க்காதே சாதிமதம் பார்வைக் குறிதப்பித்
துர்க்காதே அன்புத் துணை" (20)
“வாழ்வுக் குத்வா வறட்டு மரபுகள்
பாழ்வுக் கிணற்றின் படி” (336)

புகை பிடிப்பதை விடின் நெஞ்சுவலி இராது. உடலை மதுக் குடமாக்கிக் கொள்ளலாகாது. சாதி, மதம் பார்த்து அன்பைத் தூர்த்து விடாதே. வாழ்வுக்கு உதவாமல் பாழ் படுத்தும் வறட்டு மூட நம்பிக்கைகளை விட்டொழிக - என்றெல்லாம் குறள்களின் வாயிலாக மாணிக்கனார் மன்பதை பேணும் பெரும்பணியாற்றியுள்ளார். வள்ளுவரின் குறள் போலவே, இந்தக் குறள்களையும் கற்று ஒழுகின் பெரும்பயன் பெறலாம்.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்

தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைப் பலர் ஒத்துக் கொண்டனர் - ஆனால், தமிழகப் புலவர் குழு மட்டும் ஒத்துக் கொள்ளவில்லை - என்பதாகச் சிலர் ஒரு கருத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/201&oldid=1203086" இலிருந்து மீள்விக்கப்பட்டது