பக்கம்:தமிழ் அங்காடி.pdf/204

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202  தமிழ் அங்காடி


கைத்தொழில் பகுதி

16. நூல் நூற்கும் கைத்தொழில்

‘நூல் நூற்றல்’ என்ற தொடரைக் கேட்டதுமே காந்தியடிகளும் கைராட்டினமும் நினைவுக்கு வரலாம். நூற்றல் என்றாலே, அதன் தொடர்ச்சியாகிய கைநெசவும் சொல்லாமல் அடங்கும், கையால் நூற்றநூல் கைத்தறிக்கே பயன்படுமாதலின். அண்ணலின் கதரியக்கத்தால் எத்தனையோ ஆண்-பெண்கள் கைராட்டினமும் கையுமாக நூல் நூற்றனர் - நூற்கின்றனர் - நூற்கப் போகின்றனர் அல்லவா நமது நாட்டில்? நூல் நூற்கும் கைத் தொழிலை ஊக்கப் படுத்துவதற்காகப் பலவிடங்களில் நூற்புப் போட்டிகளை ஏற்பாடு செய்து, முதன்மையாக வெற்றி பெற்றவர்க்குப் பரிசும் தந்து மகிழ்ந்தது இந்த நாடு. இது சிலருக்குப் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றுவதையும் இங்கு நான் மறைக்க முயலவில்லை. ஏன்?

இயந்திர அடிமை

இன்றைக்கு அமெரிக்கா இயந்திரங்களின் அடிமையாக வாழ்கின்றது. வீடுகளில் எச்சில் தட்டுகளை கழுவுவதும், பெருக்குவதும், துணி துவைப்பதும், பூட்சு துடைப்பதும் இயந்திரங்களே! இத்தகைய விஞ்ஞான முன்னேற்றம் பெற்று வரும் வியத்தகு உலகில் இன்னும் கையினால் நூல் நூற்பதும், உடை நெய்வதும் எ வ் வ ள வு பைத்தியக்காரத்தனம்? என்று எண்ணத்தான் செய்வார்கள் நுனிப்புல் மேய்பவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/204&oldid=1203093" இலிருந்து மீள்விக்கப்பட்டது