பக்கம்:தமிழ் அங்காடி.pdf/208

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206  தமிழ் அங்காடி


ஜப்பான் போன்ற சில நாடுகளில் உள்ள மக்கள் எப்போதும் எதையாவது செய்து கொண்டேயிருப் பார்களாம். அதனால் அவர்கள் கெட்டுவிட்டனரா? உலக வணிகத் துறையிலே அவர்களின் சிறுகைத்தொழில் பொருள்கள் முன்னணியில் நிற்கின்றனவன்றோ? எனவே, இதுவரை கூறியவற்றால், நூல் நூற்றலும்-கைநெசவும் இருதலைப் பறவை என்பதும், நாட்டிற்கு மிகவும் தேவை என்பதும் விளங்கும்.

பழமை யுணர்தலின் பயன்:

இனி இத்தொழில் பண்டைக்காலத்து எம்முறையில் நம்நாட்டில் நிகழ்வுற்றது என்பதனை, நம் பழைய இலக்கியங் கொண்டு ஒருசிறிது ஆராய்வோம், இதனால், நம் முன்னோர் எப்படி வாழ்ந்தனர்? அவர்களின் அறிவியலும் நாகரிகமும் எவ்வா றிருந்தன? அவர்களே அன்று அப்படி வாழ்ந்தார்கள் என்றால் நாம் இன்று எப்படி வாழவேண்டும்? - என்பனவற்றையெல்லாம் உயத்துணர முடியுமல்லவா? வரலாறு எழுதிவைப்பதும், அவற்றைப் பின்னோர் படிப்பதும் மேற்கூறிய பயன்களுக்காகத்தானே?

இலக்கிய வரலாற்றுச்சான்று - இந்தியப் பஞ்சு

பண்டைக்காலத்தில் - அதாவது - ஏறத்தாழ 2000 ஆண்டுகட்கு முன்பே பருத்தியைப் பற்றிய குறிப்புகள் இலக்கியத்திலும் - வரலாற்றிலும் இடப் பெற்றுள்ளன. அக்காலத்தில் சிற்றுார்களைச் சுற்றிப் பருத்தி வேலிபோல் பயிர்செய்யப்பட்டு வந்ததையும், கோடைக்காலத்துப் பஞ்சு நன்கு பூக்கும் என்பதையும் அதை முட்டைகட்டி வைப்பார்கள் என்பதையும் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப் பெற்ற புறநானூறு என்னும் தமிழ்நூலில் உள்ள “பருத்தி வேலிச் சீறுார்", "கோடைப் பருத்தி வீடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/208&oldid=1203109" இலிருந்து மீள்விக்கப்பட்டது