பக்கம்:தமிழ் அங்காடி.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார் 19


நேரம் அமைதி (மெளனம்) காத்தன. இது, நன்றி மறவாத மக்கள் பண்பின் உயரிய எல்லையாகும்.

இப்போது, நம் நாட்டில் தங்கட்குத் தொலைபேசி இணைப்பு வேண்டும் எனப் பலர் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இப்போது, பெரும்பான்மையான வீடுகளில் மிதி (சைக்கிள்) வண்டி, வானொலிப் பெட்டி முதலியன இருப்பது போல், பெரும்பாலான வீடுகளில் தொலைபேசி இடம்பெறுவது உறுதி.

உலகம் சுருங்கிய வரலாறு - உலகைச் சுருக்கிய வரலாறு இதுதான்.

4. நாட்டிற்கு உழைத்த நல்லறிஞர்

பிறப்பு வளர்ப்பு

பலர் தாம் புகழும் பொருளும் பெறுவதையே குறிக்கோளாகக் கொண்டு உழைப்பர். நாட்டிற்குப் புகழும் பெருமையும் நன்மையும் கிடைப்பதற்காக உழைப்பவர் ஒரு சிலரே. அவர்களுள் ஒருவர் சர். பிரபுல்ல சந்திர ராய் என்பவர்.

ராய் என்றாலே வங்காளி என உயத்துணர்வாய்த் தெரிந்து கொள்ளலாம். இவர் வங்காளத்தில் உள்ள ரா ரூலி காட்டிரா என்னும் சிற்றுாரில் 1861 ஆகஸ்டு 8ஆம் நாள் பிறந்தார்.

இவர் பிறந்த குடும்பம், கலைமகளும் (சரகவதியும்) அலைமகளும் (இலக்குமியும்) இணைந்து வாழும் குடும்பம் ஆகும். இவரது தந்தை அரிச்சந்திர ராய் பாரசீகம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உயர்ந்த புலமை உடையவர். மற்றும் செல்வருமாவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/21&oldid=1203035" இலிருந்து மீள்விக்கப்பட்டது