பக்கம்:தமிழ் அங்காடி.pdf/210

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208  தமிழ் அங்காடி


இரவிலும் முயற்சி

இன்னும், அப்பெண்மணிகள் தம் விடாமுயற்சியால் பகலிலே நூற்றதல்லாமல், இரவிலும் சிறிய விளக்கை வைத்துக்கொண்டு நூற்றனர் என்பதும் தெரியவருகிறது. இதனை, புறநானூற்றில் (செ-326) உள்ள,

“பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்து"

என்னும் அடி அறிவுறுத்துகின்றது.

கெளடில்யரின் கருத்து

இக்கைத்தொழில், பொதுவாக இந்தியாவில் செய்யப் பட்டாலும், சிறப்பாகத் தென்னிந்தியாவில் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை, வடஇந்தியாவில் வாழ்ந்த கெளடில்யரே தம் ‘அர்த்தசாத்திரத்தில்’ (வடமொழி நூல்), "பொதுவாகத் தென்னாட்டில், சிறப்பாக மதுரையில் நூற்கப்பட்ட நூல் இழைகளும், அவற்றால் நெய்யப்பட்ட ஆடைகளும், இரத்தின கம்பளங்களும் பரதகண்டத்தில் சிறந்த இனங்களாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய மடந்தையர்

நம் பாரத மணிகளே யல்லாமல், ஐரோப்பிய மடந்தையரும் நூல் நூற்றனர் என்பதை, 90 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த 'ஆர்னால்டு' (ARNOLD) என்னும் ஆங்கில ஆசிரியரால் எழுதப்பட்ட 'தி பார்சேகன்' மெர்மென் The forsaken Merman) என்னும் ஆங்கிலப் பாடலால் அறியலாம். 'மார்கரெட்' (Margaret) என்னும் மாது, இராட்டினத்தைச் சுற்றிக் கொண்டும், நூற்புக் கருவியைக் கையில் வைத்து நூற்றுக்கொண்டும், அதே சமயத்தில் இறைவனை நோக்கி இன்பமாகப் பாடிக்கொண்டும் இருந்தாளாம். இவளது பொழுதுபோக்கு, "கொல்லைக்குக் களைபறித்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/210&oldid=1203113" இலிருந்து மீள்விக்கப்பட்டது