பக்கம்:தமிழ் அங்காடி.pdf/217

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  215


சிலப்பதிகாரம் - வேட்டுவ வரி

        "சூலி நீலி மாலவற்கு இளங் கிளை” (68)

திவாகர நிகண்டு

        “கொற்றவை, ஐயை, கார்த்திகை, கெளரி...
        மாலுக்கு இளையாள் சக்கரா யுதியே...
        சீர்சால் பகவதி சிறந்ததொல் பெயரே (1-23)

பிங்கல நிகண்டு

        “மாலுக்கு இளையாள், பகவதி, சயமகள்,
        பாலைக் கிழத்தி, வீரச்செல்வி...
        கொற்றவை, நாராயணி, துர்க்கை பெயரே (124)

சூடாமணி நிகண்டு

        “மாலினுக்கு இளையநங்கை பகவதி,
        வாள்கைக் கொண்டாள்,
        சூலி, சண்டிகையே, கன்னி,
        சுந்தரி, துர்க்கை நாமம்" (1-41)

ஆசிரிய நிகண்டு

‘மகுடசங்காரி, மாலுக்கு இளைய
மாது, சுந்தரி, துர்க்கைபேர்’ (1-16)

சிவயோக நாயகி பிள்ளைத் தமிழ்

“தாம நீள்முடி மாயோனுக்கு ஒரு தங்கை
சப்பாணி கொட்டுகவே” (40)

அபிராமி அந்தாதி

“தாயே, மலைமகளே, செங்கண்
மால்திருத் தங்கைச்சியே’ (61)

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

        “கங்கைக்கும் நெடியவன் தங்கைக்கும் ஒருமகன்
        சப்பாணி கொட்டி யருளே" (48)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/217&oldid=1204373" இலிருந்து மீள்விக்கப்பட்டது