பக்கம்:தமிழ் அங்காடி.pdf/218

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216  தமிழ் அங்காடி



திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்

“அயினவை முகுந்தர் தங்கை சுந்தரி" (3)

இன்ன பிற - மேலே குறிப்பிட்டுள்ள இளங்கிளை, இளையாள், இளைய நங்கை, இளைய மாது என்பன தங்கை என்னும் பொருளன. சிவயோக நாயகி பிள்ளைத் தமிழ் மாயோனுக்கு ஒரு தங்கை’ எனவும், அபிராமி அந்தாதி மால் தங்கைச்சி எனவும், முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழ் நெடியவன் தங்கை எனவும் திருச்செந்தூர்ப்பிள்ளைத் தமிழ் முகுந்தர் தங்கை’ எனவும்தங்கை,தங்கைச்சி எ ன் னு ம் பெயர்களைத் தெளிவாகக் கூறியுள்ளன.

இதுகாறும் திருமால் தமையனாகவும் உமாதேவி தங்கையாகவும் கூறப்பட்டனர். இவர்களுள், தமையனோடு தொடர்புடைய மலர் தாமரை என்பதையும், தங்கையோடு தொடர்புடைய மலர் குவளை என்பதையும் அடுத்துக் காண்பாம்.

திருமாலும் தாமரையும்

பரிபாடல் - திருமால்

        "அடையிறங் தவிழ்ந்த வள்ளிதழ்த் தாமரை
        அடியும் கையும் கண்ணும் வாயும்" (13-50, 51)

சிலப்பதிகாரம்-ஆய்ச்சியர் குரவை-படர்க்கைப் பரவல்

        "கண்ணும் திருவடியும் கையும் திருவாயும்
        செய்ய கரியவனை” (2)

திருவாய் மொழி

        "கண் கை கால், தூய செய்ய மலர்களாய்ச்
        சோதிச் செவ்வாய் முகிழ்த்த
        தாமரை நீள் வாசத் தடம்போல் வருவானே”
(8–5-1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/218&oldid=1204377" இலிருந்து மீள்விக்கப்பட்டது