பக்கம்:தமிழ் அங்காடி.pdf/226

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224  தமிழ் அங்காடி



இலக்கணப் பகுதி


18. யாப்பு இலக்கண அறிமுகம்


மாணாக்கன்: வணக்கம் ஐயா.

ஆசிரியர்: வணக்கம். வருக. அமர்க. இன்றைக்கு யாப்பு இலக்கணம் பற்றிப் பார்க்கலாம்.

மா: நல்லது ஐயா.

ஆ: யாப்பு என்றால் செய்யுள்; செய்யுள் இயற்றுவ தற்கு உரிய இலக்கணம் யாப்பு இலக்கணமாகும். யாப்பு, செய்யுள், பா, பாட்டு, பாடல் என்பன ஏறக்குறைய ஒரு பொருள் உடையன.

மா: அப்படியா ஐயா!

ஆ: ஆம். பழந்தமிழ் இலக்கண நூலாகிய தொல் காப்பியத்தில், யாப்பிலக்கணத்திற்காக யாப்பதிகாரம்’ என ஒரு தனி அதிகாரம் இல்லை. பொருளதிகாரத்திலேயே ஓர் உறுப்பாகச் 'செய்யுளியல்’ என்னும் ஒரு பகுதி உள்ளது. பின் வந்த வீரசோழியம் முதலிய நூல்களில்தான் யாப் பிலக்கணத்திற்காக ஒரு தனிப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

மா: தெரிகிறது ஐயா.

ஆ: செய்யுள் உறுப்பாக, எழுத்து-அசை - சீர்-தளைஅடி என்பன உள்ளன. எழுத்தால் ஆனது அசை, அசை யால் ஆனது சீர்; சீரால் ஆனது தளை; தளையால் ஆனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/226&oldid=1204389" இலிருந்து மீள்விக்கப்பட்டது