பக்கம்:தமிழ் அங்காடி.pdf/238

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236  தமிழ் அங்காடி


காய்ச்சல் (சுரம்) அடித்தது. அந்தக் காய்ச்சலின் அளவை அறிய மருத்துவரிடம் “வெப்பமானி’ (Thermometer) இல்லை. அதைப் புரிய வைப்பதற்காக, ஈயச்சட்டி காய்வதைப் போல் உடம்பு சுட்டதாகச் சொன்னாள். ஈயச்சட்டியைக் காயவைத்தால் மிகுதியாகச் சுடும். சூடான பொருளைத் தொட்டவர்கள் "ஈயம் போல் சுடுகிறது - ஈயம் போல் ஒட்டிக் கொள்கிறது” - என்று உலக வழக்கில் கூறுவதைக் கேட்டிருக்கலாம். எனவே, இங்கே, வெப்பமானியின் வேலையை ஈயச்சட்டி செய்திருக்கிறது.

மா: கேட்பதற்குச் சுவையாக இருக்கிறதையா!

ஆ: இன்னும் கேள். மற்றொரு குழந்தையின் இரைப்பு நோயின் அளவை அறிவிக்கப் பெருச்சாளியின் துணையை நாடியிருக்கிறாள் அப்பெண். பெருச்சாளிக்கு இரைக்குமேயானால் பேரொலி கேட்கும்; குழந்தைக்கும் அதுபோல் இருந்ததாம் - என்று உவமையின் வாயிலாக விளக்கியிருக்கிறாள். இங்கே பெருச்சாளியின் தொண்டு பெரிது.

மா: கேட்பதற்கு மேன்மேலும் சுவையாயிருக்கிறது ஐயா.

ஆ: இவ்வாறு, படிக்காத பாமர மக்களின் பேச்சிலும் உவமை புகுந்து விளையாடுகிறது. இதைக் கொண்டு உவமை அணியின் சிறப்பைப் புரிந்து கொள்ளலாம்.

மா: ஆம் ஐயா! சரி, உவமை அணி பல கோலம் புனைந்துள்ளது. உவமை அணியில் பல அணிகள் அடங்கியுள்ளள - என்றெல்லாம் கூறினீர்களே. ஏதாவது வேறு ஓர் அணியை எடுத்துக்காட்டி அதை உவமை அணியோடு பொருத்திக்காட்ட வேண்டுகிறேன் ஐயா.

ஆ: நல்லது. கேள். உலக வழக்கில், ஒருவர், “என் கதவு திறந்தே யிருக்கிறது’ - என்று கூறினால், அதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/238&oldid=1204423" இலிருந்து மீள்விக்கப்பட்டது