பக்கம்:தமிழ் அங்காடி.pdf/242

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240  தமிழ் அங்காடி



பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த
பன்னிரு படலமும் பழிப்பின் றுணர்ந்தோன்”

என்னும் பாடல் பகுதியால் அகத்தியர்க்கு மாணாக்கர் தொல்காப்பியர் என்னும் குறிப்பு கிடைக்கிறது.

2.2 தொல்காப்பியம்

அடுத்து, நமக்கு முழுமையாகக் கிடைக்கும் முதல் இலக்கண நூல் தொல்காப்பிய மாகும். எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம் என்னும் ஐந்திலக்கணங்களும் அமைத்துத் தொல்காப்பியர் இந்நூலை இயற்றியுள்ளார். இதற்கு இணையான நூல் இன்றளவும் வேறு இல்லை.

2.3 பன்னிரு புலவர்

அகத்தியரின் மாணாக்கராக மேலே கூறப்பட்டுள்ள பன்னிரு புலவர்களும் இலக்கண நூல்கள் எழுதியிருப்ப தாகச் சொல்லப்படுகிறது ஒரு கருத்து. அவற்றுள், அவிநயனார், காக்கைபாடினியார், செயிற்றியனார், பனம் பாரனார், நற்றத்தனார் முதலியோர் எழுதிய அவிநயனம், காக்கை பாடினியம், செயிற்றியம், பனம்பாரனம், நற்றத்தம் முதலிய நூல்களும் முழுதும் கிடைக்கவில்லை. சில நூற்பாக்கள் மட்டும், யாப்பருங்கல உரை முதலிய உரை நூல்களில் எடுத்தாளப்பட்டுள்ளன.

2.4 நன்னூல்

தொல்காப்பியத்திற்குப் பின் பல நூல்கள் தோன்றினும் அதற்கு அடுத்த படியாக இப்போது பயன்படுத்தப் பெறுவது, பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் என்னும் நல்ல நூலே யாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/242&oldid=1204428" இலிருந்து மீள்விக்கப்பட்டது