பக்கம்:தமிழ் அங்காடி.pdf/251

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  249



வடமொழி ஒலிப்பை ஈடுசெய்யத் தமிழில் இயற்கையான அமைப்பு உள்ளது. 'பகல்' என்பதிலுள்ள ‘க’ வடமொழியில் முதல் ‘க'வை ஈடுசெய்கிறது. 'பக்கம்’ என்பதிலுள்ள ‘க’ வடமொழியின் இரண்டாவது 'க்க'வை ஈடு செய்கிறது. 'தங்கம்' என்பதிலுள்ள ‘க’, வடமொழியின் மூன்றாம் ‘ங்க'வை ஈடு செய்கிறது. ‘தங்ஙகம்' என்னும் ஒற்றளபெடைச் சொல்லிலுள்ள ‘ங்ஙக’, வடமொழியின் நான்காவதாகிய ‘ங்ஙக'வை ஈடு செய்கிறது. இதுபோல் ச, ட, த, ப என்பவற்றிற்கும் கொள்ளல் வேண்டும். ‘ஃ’ என்னும் ஆய்தமும் 'அணில் பணி' செய்கிறது.

எனவே, தமிழ் மெய்யெழுத்துகளின் மொழிக்குச் செழுமையும் இனிமையும் தருகிறது.

5.2 அளபெடை

அளபெடை என்னும் எழுத்து தமிழில் உள்ளது. இஃது தமிழ் இலக்கணச் செழுமையின் ஓர் அளவு கோலாகும். பாட்டில் ஒலி (அசை) குறையின், இரண்டு மாத்திரை உடைய நெடிலின் பின் அதன் இனமாகிய ஒரு மாத்திரை உடைய குறில் சேர்ந்து ஒலியை ஈடு செய்யும் எனத் தொல்காப்பியரும் ந ன் னு லா ரு ம் கூறியுள்ளனர். தொல்காப்பியர் நூல் மரபு இயலில்,

                "நீட்டம் வேண்டின் அவ்வள புடைய
                கூட்டி எழுஉதல் என்மனார் புலவர்" (6)

என்றும், மொழி மரபு இயலில்,

                “குன்றிசை மொழிவயின் கின்றிசை நிறைக்கும்
                நெட்டெழுத் திம்பர் ஒத்தகுற் றெழுத்தே" (9)

என்றும் கூறியுள்ளார். பவணந்தியார் நன்னூல் - எழுத்தியலில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/251&oldid=1204448" இலிருந்து மீள்விக்கப்பட்டது