பக்கம்:தமிழ் அங்காடி.pdf/256

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254  தமிழ் அங்காடி



ஆடி, ஒடி, கலக்கி, விளங்கி என்னும் வினையெச்சங்கள் ஆடு, ஒடு, கலக்கு விளங்கு என்னும் குற்றுகரத்தோடு ‘இ’ சேர்ந்து வருதலின், 'செய்’ என்னும் அடியில் 'இ’ சேர்த்துச் செய்யி என வாய்பாடு அமைக்கவில்லைபோலும். செய் என்பது குற்றுகரம் அன்று அல்லவா? இருப்பினும் அமைத்திருக்கலாம்.

தொல்காப்பியத்தில் - வினையியலில் கூறப்பட்டுள்ள வினையெச்ச வாய்பாட்டு நூற்பாக்கள் வருமாறு:-

"செய்து செய்யூ செய்பு செய்தெனச் செயியர் செய்யிய செயின்செய செயற்கென அவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி" (31)

"பின்முன் கால்கடை வழிஇடத்து என்னும் அன்ன மரபின் காலம் கண்ணிய என்ன கிளவியும் அவற்றியல் பினவே” (32)

இந்த வாய்பாடுகளுள் முதல் மூன்றும் வினைமுதலின் வினையைக்கொண்டு முடியுமாம். மற்றவை, வினை முதல் வினையையாவது பிறவினையையாவது சூழ்நிலைக்கு ஏற்பக்கொண்டு முடியுமாம்:

        "அவற்றுள்
        முதல்நிலை மூன்றும் வினைமுதல் முடியின” (33)

        “ஏனை எச்சம் வினைமுத லானும்
        ஆன்வந் தியையும் வினைநிலை யானும்
        தாமியல் மருங்கின் முடியும்என்ப” (35)

என்பன நூற்பாக்கள்.

வினையெச்ச வாய்பாடுகளைப் பற்றி இவ்வளவு நுட்பமாகக் கூறியிருப்பது ஒருவகை இலக்கணச் செழுமையே.

பின், முன், வழி, இடத்து என்பன பெற்ற செய்தபின், செய்யுமுன், செய்தவழி, செய்தவிடத்து முதலிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/256&oldid=1204456" இலிருந்து மீள்விக்கப்பட்டது