பக்கம்:தமிழ் அங்காடி.pdf/258

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256  தமிழ் அங்காடி



மொழிப் பகுதி


21. தமிழ் மொழியில் செய்யவேண்டிய

சீர்திருத்தங்கள்


தமிழ் மொழியில் செய்யவேண்டிய சீர்திருத்தங்களாகச் சிலர் கூறுவனவற்றுள், ஏறக்குறையப் பேசுவதுபோல் எழுத வேண்டும் என்பதும் ஒன்று. இவ்வாறு கூறுவதற்குக் காரணம், கடினமான எழுத்து நடையில் இருப்பதை எல்லாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை - அதனால் மொழி வளர்ச்சி குன்றும் என்பதாகும். எல்லாராலும் என்பதில் ஐந்தாம் வகுப்பு அல்லது எட்டாம் வகுப்பு படித்தவர் மட்டுமல்லர் - பெரிய பெரிய ஆங்கிலப் பட்டங்கள் பெற்றுப் பெரிய பெரிய பதவிகளில் இருக்கும் மேதைகளுள் சிலரும் அடங்குவர்.

சரி - பேசுவதுபோல் எழுதவேண்டும் எனில், யார் பேசுவது போல் எழுதவேண்டும்? எந்த நாட்டார் - எந்த மாவட்டத்தார் - எந்த வட்டாரத்தார் - எந்த மதத்தார் - எந்தக் குலத்தார் பேசுவது போல் எழுதவேண்டும் என்னும் வினா எழுகின்றது. ஆங்காங்கே, உள்ளவர் ஆங்காங்கே உள்ளபடிக் கண்டவாறு பேசியதால்தான் செந்தமிழ் நிலம் எனவும், செந்தமிழ் சேர் பன்னிரு நிலம் எனவும் தமிழ் பல பிரிவினைக்கு உள்ளாகியது.

உலகில் ஒவ்வொரு மொழியும் முதல் முதலாக எழுதப்பட்டபோது, பேச்சு வழக்கே பின்பற்றப்பட்டது. அதாவது பேசியது போலவே எழுதப்பட்டது. முதல் முதலாக எழுதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/258&oldid=1204461" இலிருந்து மீள்விக்கப்பட்டது