பக்கம்:தமிழ் அங்காடி.pdf/263

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  261


பக்கத்தில் அடைப்புக் குறிக்குள் ஆங்கிலச் சொல்லை எழுதலாம்.

மற்றும் ஒருவகைச் சீர்திருத்தம் பற்றிப் பேசி வருகின்றனர். அதாவது, தெனாலிராமன் கறுப்பு நாயை வெள்ளை நாயாக்க முயன்றதுபோல், தமிழுக்குப் பழைய தமிழ் எனப் பெயரிட்டு, அதில் சில மாற்றங்கள் செய்து புதிய தமிழ் உருவாக்கவேண்டும். என்பது அவரது கூற்று. இதற்கு,

"பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே"

என்னும் நன்னூல் நூற்பாவைத் துணையாகக் கொள்கின்றனர். மற்றும், ஆர்தர் என்னும் மன்னன், இறுதிக் காலத்தில், தன் அமைச்சர் பெடாவரிடத்தில் கூறிய ‘The old order changeth yielding place to new’ என்பதையும் அவர்கள் துணைக்கு அழைக்கலாம். ஆனால், ‘பழைய காலைத் தூர்க்காதே - புதிய காலை விடாதே’ என்னும் பழமொழியும் அவர்கட்கு நினைவில் வரவேண்டும்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் சரி - ஆனால் பழையன கழித்தலும் புதியன புகுத்தலும் கூடா அல்லவா? இப்போது நாம் பழையன கழித்தலும் புதியன புகுத்தலும் செய்வதற்கு முன்பே, தொல்காப்பியர் கூறியவற்றுள் ஒருசிலவற்றை விட்டும், கூறாத ஒரு சிலவற்றைக் கொண்டும் நன்னூலார் செயல்பட்டுள்ளார். இவ்விருவராலும் சொல்லப்படாத சிலவற்றை உரையாசிரியர்கள் ஒருவகை வாய்ப்பை உண்டாக்கிக்கொண்டு சேர்த்துள்ளனர். புதிய மூளைகட்கு முன்பே பழைய மூளைகள் வேலை செய்துள்ளன.

ஆனால், தொல்காப்பியரும் நன்னூலாரும் கூறியுள்ள ஐ, ஒள என்னும் இரண்டு எழுத்துகளையும் தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/263&oldid=1204471" இலிருந்து மீள்விக்கப்பட்டது