பக்கம்:தமிழ் அங்காடி.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சுந்தர சண்முகனார் 25


'அணுத்திரள்களின் பருமான அளவைகளை வரையறுத்தல்’ - ஆகியவை இவரின் கட்டுரைகள். இவரது ஆய்வுத் திறனைப் பாராட்டிச் சுரிக் பல்கலைக் கழகம் ‘தத்துவப் பேராசிரியர்' என்ற பட்டம் வழங்கிற்று.

இடம், காலம், உலகம் பற்றிய ஆய்வு சார்புக் கொள்கை தொடர்பானது. அணுகுண்டு செய்வதற்கு இந்தச் சார்புக் கொள்கைதான் முதல் காரணமா யிருந்தது என்று சொல்லப்படுகிறது.

மின்சாரத்தை ஒளியாகவும் ஒளியை மின்சாரமாகவும் மாற்றலாம் (Photo - Electric Effect) என்பதும் ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு.

ஓர் ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது; வேண்டுமானால், ஒரு விதமான ஆற்றலை மற்றொரு விதமான ஆற்றலாக மாற்றலாம் என்பது இவரது கொள்கை. இதற்கு, 'ஆற்றல் அழியா விதி’ என்பது பெயர்.

இதிலிருந்து நாம் கடவுளின் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலுக்கு வருவோம். நான் (சுந்தர சண்முகம்) 18-ஆம் அகவையிலிருந்து இப்படி ஒரு கருத்து சொல்லி வருகிறேன். அதாவது:- கடவுள் எதையும் புதிதாகப் படைக்கவில்லை; எதையும் நீண்ட நாள் காக்க முடியாது; எதையும் இல்லாதபடி அழிக்க முடியாது - என்பது நான் கூறியது. ஒன்று திரிந்து மற்றொன்றாதலே நடைபெறுகிறது. இருக்கும் பொருளிலிருந்து - ஆற்றலிலிருந்து ஒன்றை உண்டாக்கலாம் - சிறிது காலம் இருக்கச் செய்யலாம் - மீண்டும் அது அழிந்து வேறொன்றாக மாறி விடுகின்றது. எடுத்துக்காட்டாக:- ஒரு விதையிலிருந்து ஒரு மரத்தை உண்டாக்குகின்றோம் (படைத்தல்); பின் அதை வளர்க்கின்றோம் (காத்தல்); பின் மரம் நாளாகி விழுந்து விட்டதும் அடுப்பில் விறகாக இட்டு எரிக்கின்றோம்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/27&oldid=1203094" இலிருந்து மீள்விக்கப்பட்டது