பக்கம்:தமிழ் அங்காடி.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  31


இராமன் எந்தப் பதவியில் இருப்பினும் ஆராய்ச்சிப் பணியை மட்டும் விடாது தொடர்ந்து கொண்டிருந்தார். கல்கத்தாவில் டெபுடி அக்கெளண்ட்டண்ட் ஜெனரல் பதவியில் இருந்தபோதுதான் தமது ஆய்வின் பெரும் பகுதிகளைச் செய்தார்.

இராமன் விளைவுகள்

வெண்ணிறமாகத் தெரியும் ஞாயிறின் ஒளியில் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம், ஊதா ஆகிய ஏழு நிறங்கள் அடங்கியுள்ளன என்பதை சர்.ஐசக் நியூட்டன் ஆய்ந்து கூறினார். அந்தப் பல நிறக் கதிர்களின் ஆற்றலை நீல நிறக் கதிர்கள் பெற்றுள்ளன என இராமன் ஆய்ந்து கண்டார்.

ஒளி அணுக்கள் வேறு பல அணுக்களுடன் மோதும் போது ஒளிச் சிதறல் ஏற்படுகிறது. அப்போது, மிகுந்த ஆற்றல் கொண்ட நீலநிறக் கதிர்கள் மட்டுமே நம் கண்ணுக்குத் தெரிகின்றன. கடலும் வானமும் நீல நிறமாகத் தெரிவதன் அடிப்படை இதுவே.

ஒருவித ஒளி மற்றொரு விதப் பொருளின் வழியே போகும்போது சிதறும்; அதனால் வெளிவரும் ஒளிக் கதிர்களின் நிறம், நாம் செலுத்தும் ஒளியின் இயல்பையும், அது எந்தப் பொருளின் வழியாக அனுப்பப்பட்டுச் சிதறுகிறதோ அந்தந் பொருளிலுள்ள அணுக்களின் அமைப்பையும் பொறுத்திருக்கும்.

ஒளிச் சிதறல் பற்றி இராமன் ஆய்வு செய்து கண்ட முடிபுகள் 'இராமன் விளைவுகள்' (Raman Effects) என்னும் பெயரால் வழங்கப்படுகின்றன.

இராமன் மேலும் சில ஆய்வுகள் செய்திருக்கிறார். தண்ணிரில் சோப்பு கரையும் போது குமிழ்கள் கொப்பளிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/33&oldid=1203064" இலிருந்து மீள்விக்கப்பட்டது