பக்கம்:தமிழ் அங்காடி.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48  தமிழ் அங்காடி


நாட்டில் உள்ள பரதனை அழைத்து வரும்படி ஏவப்பட்ட தூதுவன் பரதனை அடைந்தபோது, தயரதன் இங்கே அயோத்தியில் இறந்து விட்டான். இது தூதுவனுக்கும் தெரியாது - பரதனுக்கும் தெரியாது. ஆயினும், வந்த தூதுவனை நோக்கிப் பரதன் தன் தந்தை தயரதனின் நலனை உசாவுகிறான்.

அப்பா நலமா இருக்கிறாரா என்று வினவுவது உலகியல். அப்பா எந்தத் தீமையும் இல்லாமல் இருக்கிறாரா என்று கேட்பது வழக்கம் இல்லை. ஆனால், தந்தை தீது இல்லாமல் உள்ளாரா என்று பரதன் வினவியதாகக் கம்பர் பாடலை அமைத்துள்ளார்.

              "தீது இலன்கொல் திருமுடியோன் என்றான்"

என்பது பாடல் பகுதி. திருமுடியோன் என்றது தயரதனை. தந்தை தீமை அடைந்துள்ளான் - அதிலும் பெரிய இறுதிச் சாவுத் தீமை அடைந்துள்ளான் - இதைப் பின்னால் பரதன் தெரிந்து கொள்ளப் போகிறான். ஆனால் கேட்டதோ ‘தீதிலன் கொல்’ என்பது.

‘கொல்’ என்பது ஐயப் பொருளிலும பொருளற்ற வெற்று அசைநிலையாகவும் வரும்.

                "கொல்லே ஐயம் அசைநிலைக் கூற்றே" (16)

என்பது நன்னூல் இடையியல் நூற்பா. இங்கே, 'தீதிலன் கொல்' என்பதிலுள்ள 'கொல்' என்பதை மேலோடு பார்க்கின் அசைநிலையாய்த் தோன்றும்; ஆழ்ந்து பார்க்கின் ஐயப்பொருள் அதில் மறைந்திருப்பது தெரியும். இப்போது தயரதன் இன்மையால் ஐயத்திற்கு இடம் வைத்துக் கம்பர் பாடியுள்ளார்.

தந்தை என்று குறிப்பிடாமல் திருமுடியோன்’ என்றான். இப்போது தயரதன் முடியிழந்ததல்லாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/50&oldid=1202403" இலிருந்து மீள்விக்கப்பட்டது