பக்கம்:தமிழ் அங்காடி.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  49


இறந்தே விட்டான். இத்தகைய சொல்நயம் - பொருள் நயங்களைச் சுவைக்கக் கம்பனிடம் வரவேண்டும்.

இது மிகவும் சுவையான பகுதியாகும். சுவைக்குமேல் சுவையாக அடுத்து மற்றொன்று உள்ளது. அதாவது: நீங்கள் வருவதற்கு யாங்கள் என்ன புண்ணியம் செய்தோமோ. யாங்கள் செய்த புண்ணியப் பயனே உங்கள் வருகை-என்று இராமன் கூறியது, குத்தலும் கிண்டலும் உடையது. இது புகழ்வது போலப் பழிக்கும் வஞ்சகப் புகழ்ச்சி அணியாகும்.

மற்றும், புதிதாய் வந்தவர்களை நோக்கி, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? உங்கள் பெயர் என்ன? நீங்கள் யார்-உங்களைச் சேர்ந்தவர்கள் யார்-என்றெல்லாம் வினவுகிற உலகியலின்படி இராமன் வினவியிருப்பது இயற்கையாய் அமைந்து நயம் பயக்கிறது.

திறமையான அறிமுகம்

அரக்கி மிகவும் திறமையுடன், தான் பெரிய இடத்துப் பெண் என அறிவிக்கும் முறையில் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.

நான் படைப்புக் கடவுளாகிய பிரமனின் கொள்ளுப் பேர்த்தி, ஒரு வகையில் சிவனுக்கு நண்பனான குபேரனின் தங்கை நான். இன்னொரு வகையில், எட்டுத்திக்கு யானைகளையும் வென்றவனும் வெள்ளி மலையைத் தூக்கியவனும் மூவுலகங்களையும் ஆள்பவனும் ஆகிய இராவணனுக்கும் தங்கை நான். என் பெயர் காம வல்லி. நான் ஒரு கன்னி. என்றாள்:

            “பூவி லோன் புதல்வன் மைந்தன் புதல்வி
                 முப்புரங்கள் செற்ற
            சேவலோன் துணைவ னான செங்கையோன்
                 தங்கை திக்கின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/51&oldid=1202406" இலிருந்து மீள்விக்கப்பட்டது