பக்கம்:தமிழ் அங்காடி.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58  தமிழ் அங்காடி



இவ்வாறு புனைந்துரைப்பது கம்பரிடத்தில் உண்டு. சீதைக்கு ஒப்பனை (அலங்காரம்) செய்த மகளிரே சீதையின் அழகுக்கு மயங்கி விட்டதாகக் கம்பர் கூறி

"மஞ்சர்க்கும் மாதரார்க்கும் மனம்
என்பது ஒன்றே யன்றோ"

எனப் பால காண்டத்தில் கூறியுள்ளார். மற்றும், இராமன் ‘ஆடவர் பெண்மையை அவாவும் தோளினன்’ எனக் கூறவும் தவறவில்லை.

இந்தக் காலத்தில் எந்தெந்த நாடுகளிலோ, ஆடவரோடு ஆடவரும், பெண்டிரோடு பெண்டிரும் காதலித்து மணந்து கொள்வதாகச் செய்தி அடிபடுகிறது. ‘நம்மனோர்க்குக் காட்டுமிறாண்டித் தனமாகத் தோன்றுகின்ற இந்த இழி செயல் போன்றதன்று கம்பன் கூறியிருப்பது. அழகின் மிகுதியை உயர்வு நவிற்சியாகப் புனைந்துரைத்துள்ள கற்பனையே இது.

ஒண்ட வந்த பிடாரி

சீதையைக் குறிப்பிட்டு இராமனிடம் அரக்கி கூறுகின்றாள். இவள் வஞ்சக அரக்கி; மாறு கோலத்தில் வந்துள்ளாள். ஊன் உண்ணும் வாழ்க்கையவள்; இவளைக் கண்டு யான் அஞ்சுகிறேன்; இவளை விலக்கிவிடு என்றாள். இராமன் வேடிக்கையாகச் சிரித்தான். பின் அரக்கி சீதையை நோக்கி, அரக்கியே! எங்களுக்கு இடையே நீ ஏன் வந்தாய்? போய்விடு என்று மிரட்டினாள்.

             "நீ யிடை வந்தது என்னை
                 நிருதர்தம்பாவை என்னாக்
             காயெரி யனைய கள்ள
                 உள்ளத்தாள் கதித்தலோடும்” (65)

என்பது பாடல் பகுதி, 'ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியைத் துரத்திற்றாம்' என்னும் பழமொழிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/60&oldid=1202381" இலிருந்து மீள்விக்கப்பட்டது