பக்கம்:தமிழ் அங்காடி.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  73


பெயர் கூறுவர். சங்க இலக்கியங்களில் இந்த அமைப்பை நிரம்பக் காணலாம். கம்பரும் இதைக் கையாண்டுள்ளார்.

இவ்வாறு கூறிய அரக்கியை நோக்கி இவ்விடத்தை விட்டு ஒடிப்போ என இராமன் விரட்டினான். ஆனால் அரக்கி நகராமல் மேலும் மேலும் வற்புறுத்திக் கொண்டே இருந்தாள்.

முக்கு மிகை

சூர்ப்பணகை கூறுகிறாள்: என் மூக்கை அறுத்ததனால் என்ன கெட்டுப்போயிற்று. உங்களுக்கு இந்தத் தோற்றம் பிடிக்கவில்லை எனில் அழகான வேறு தோற்றம் எடுக்க என்னால் இயலும். என்பால் நீங்கள் அருள் செலுத்துவீர்களாயின் என் பெண்மைக்குப் பழுதொன்றும் இல்லை. முகத்தில் முன்னால் நீட்டிக் கொண்டிருக்கும் மூக்கு பெண்களுக்குத் தேவையற்றது - மிகையானது:


"போக்கினீர் என்காசி, போய்த்து
என், நீர் பொறுக்கிலீரேல்
ஆக்குவென் ஒருநொடி வரையின்
அழகு அமைவென் அருள்கூரும்
பாக்கியம் உண்டெனின் அதனால்
பெண்மைக்கு ஒர் பழுது உண்டோ
மேக்கு உயரும் நெடுமூக்கு
மடந்தையர்க்கு மிகை அன்றோ" (130)

நாசி = மூக்கு. மேக்கு உயர்தல் = மேலே உயர்ந்து தோன்றுதல். தன் மூக்கு போய்விட்டதால், மூக்கு மிகை யானது - தேவையற்றது எனச் சமாளிக்கிறாள்.

ஒரு காலத்தில் மூக்கோடு மூக்கு ஒத்தி முத்தம் கொடுப்பது நடந்ததாம். பின்னர், உதடோடு உதடு உறிஞ்சி முத்தம் கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டதாம். எனவே, முக்கு முத்தம் குறைந்து பின் மறைந்ததாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/75&oldid=1202301" இலிருந்து மீள்விக்கப்பட்டது