பக்கம்:தமிழ் அங்காடி.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  77


                ஒருங்கிலா இவளோடும் உறைவேனோ
                என்பானேல் இறைவ ஒன்றும்
                மருங்கு இலாதவளோடும் அன்றே நீ
                நெடுங்காலம் வாழ்ந்தது என்பாய்" (141)

நாசி = முக்கு. மருங்கு = இடுப்பு.

பெண்களின் இடை சிறுத்து இருப்பதால் இடையே இல்லை என்பதாகப் புலவர்கள் பாடுவது ஒரு வகை மரபு. இந்தக் கருத்தை வைத்து அரக்கி திறமையாகவும் சூழ்ச்சியுடனும் பேசிப் பார்க்கிறாள். சிறியவன் மூக்கில்லை என மறுக்கின், இடையில்லாத சீதையுடன் நீ வாழ்வதைச் சுட்டிக் காட்டு என்று சொல்லித் தருகிறாள். அயோத்திக்குச் செல்லும்போது அழகிய உருவம் எடுத்துக் கொள்வேன் எனக் கூறி ஏமாற்றிப் பார்க்கிறாள்.

அரக்கியை மிரட்டல்

காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது என்பதற்கேற்ப எவ்வளவு மறுத்தும் அரக்கி போவதாகத் தெரியவில்லை. உடனே இலக்குவன், வேல் படையைக் கடைக்கண்ணால் பார்த்தபடி, இராமனிடம், இவளைக் கொன்றால் தவிரப் போக மாட்டாள் - எனவே கொன்று விடலாம் என ஆணை கேட்டான். அது நல்லதே - போகாமல் இருந்து கொண்டே இருப்பாளேயானால் அது செய்யலாம் என்றான்:

             "என்றவள்மேல் இளையவன்தான் இலங்கு இலைவேல்
                 கடைக்கணியா இவளை ஈண்டுக்
             கொன்று களையேம் என்றால் நெடி தலைக்கும்
                 அருள் என்கொல் கோவே என்ன
             நன்று அதுவே ஆம் அன்றோ போகாளேல்
                 ஆக என நாதன் கூற
             ஒன்றும் இவர் எனக்கு இரங்கார் உயிர் இழப்பென்
                 நிற்கின் என அரக்கி உன்னா" (142)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/79&oldid=1202307" இலிருந்து மீள்விக்கப்பட்டது