பக்கம்:தமிழ் அங்காடி.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86  தமிழ் அங்காடி



'எயிறு வாயில் தின்றனன்' என்பது நயமான - சுவையான தொடர். சுவை அறியவும் பேசவும் உதவுவதே நாக்கின் வேலை. தின்னுவது தான் பற்களின் வேலை. பற்கள் போய் விட்டன . அதனால் எதையும் சரியாய்த் தின்ன முடியவில்லை என்னும் உலக வழக்காறு ஈண்டு எண்ணத்தக்கது. ஆனால், வாய்க்குள் போட்டுப் பற்களால் கடித்தும்மென்றும் தின்பதற்கு இங்கே வீடணனுக்கு ஒன்றும் இல்லை; ஆதலின், மேல் பற்களும் கீழ்ப் பற்களும் தம்மோடு தாம் கடித்துக்கொள்ளுதல்தான் இங்கே வாய்க்குள் தின்றலாகும். பற்களை 'நறநற' என்று கடித்தல் சினத்தின் வெளிப்பாடாகும்.

Shakespeare (ஷேக்ஸ்பியர்) என்னும் ஆங்கிலப் பெயரை நான் (சு.ச.) என் நூல்களில் 'சேக்சுபியர்' என்று எழுதுவது வழக்கம். இவ்வாறு எழுதுவது சரியா என என்னை ஒருவர் வினவினார். கம்பர் விபீஷணன் என்னும் வடமொழிப் பெயரை வீடணன் எனத் தமிழ்ப்படுத்தியிருப்பதை நான் அவருக்குச் சுட்டிக்காட்டினேன். பிறமொழிப் பெயர்களைத் தமிழ்ப்படுத்துவது எவ்வாறு என்பதை இங்கே கம்பர் நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளார்.

எல்லாத் தீவினைகளையும்வென்ற மெய்யுணர்வினரைப் போன்றவன் வீடணன் என்று கூறியதன் வாயிலாக, வீடணன் நல்லன் என்பதற்கு, இந்தப் பாடலிலேயே அடிப்படை (Foundation) போட்டுள்ளார் கம்பர். இந்த அடிப்படையின் மேல் எழுந்த கட்டிடம், வீடணன் முடி சூடிக்கொள்ளும் அளவிற்கு நாளடைவில் உயர்ந்து ஓங்கியது.

நூலறிவும் நுண்ணறிவும்

வீடணன் இந்திர சித்தை நோக்கிக் கூறுகிறான். எதிராலே - எதிர் காலத்திலே செய்ய வேண்டியதைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/88&oldid=1202365" இலிருந்து மீள்விக்கப்பட்டது