பக்கம்:தமிழ் அங்காடி.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  87


தீர்மானித்துக் கூறும் ஆற்றல் உடையவர்கள், நூல் அறிவோடு நுட்பமான சொந்த அறிவும் உடையவர்களே யாவர். ஏ இந்திரசித்தே தக்க காலமும் எதிராலே நிகழக் கூடிய பயனும் இன்னவை என்பதைக் கற்றுணரும் பட்டறி வில்லாத சிறு பையன் நீ. உன் தந்தையிடம் இவ்வளவு கூற உனக்கு என்ன தகுதி உள்ளது?

                "நூலினால் நுணங்கிய அறிவு நோக்கினர்
                போலுமால் உறுபொருள் புகலும் பூட்சியர்
                காலம் மேல் விளைபொருள் உணரும் கற்பு இலாப்
                பாலன் நீ இணையன பகரற் பாலையோ’ (66)

நுணங்கிய அறிவு = மதி நுட்பம். பூட்சி = உறுதி, கொள்கை.

இப்பாடலின் முதல் அடியில்,

                “மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
                யாவுள முன்னிற் பவை” (635)

என்னும் குறளை அடக்கியுள்ளார் கம்பர். மற்றும், காலம் அறிதல், வினைசெயல்வகை முதலிய திருக்குறள் தலைப்புகள் சிலவும் ஈண்டு இலை மறைகாய்களாக உள்ளன.

மேல் விளை பொருள் உணராப் பாலன் என்பது பொருத்தமா யுள்ளது. இறுதியில் (மேலே) விளைந்தது இராவணனின் முடிவுதானே. 'டேய், நீ சிறு பையன் - உனக்கு என்னடா தெரியும் - எல்லாம் தெரிந்தவன்போல் பேச வந்து விட்டாய்' - என்று மக்கள் கூறும் வழக்காறு ஈண்டு எண்ணத்தக்கது. சிறு பிள்ளை இட்ட வேளாண்மை (விளைந்த பொருள்) வீடு வந்து சேராது என்பது தென்னார்க்காடு மாவட்டத்துப் பழமொழி, 'இளங்கன்று அச்சம் அறியாது’ என்பது பரந்துபட்ட பழமொழி.

மேலும், நூலறிவு மட்டும் போதாது - சொந்தமான நுட்பமான பட்டறிவும் வேண்டும் என்னும் கருத்துக்கு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/89&oldid=1202388" இலிருந்து மீள்விக்கப்பட்டது