பக்கம்:தமிழ் அங்காடி.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  93



இனிமேல் சீதையை இராமனிடம் அனுப்பின், நாம் கையாலாகாதவர்கள் என உலகம் நம்மை இழிக்கும் என்னும் கருத்துப்படக் கும்பகருணன் கூறினான். ஆனால், வீடணனோ, சீதையை விட்டுவிடுவது தான் வெற்றி அதிலும் . இதுவரையும் பெற்றுள்ள வெற்றிகளினும் மேற் பட்ட பெரிய வெற்றி யாகும் என்னும் கருத்துப்படக் கூறியுள்ளான். வீடணன் இவ்வாறு கூறியதால், அவன் அறிஞர்கட்குள் சிறந்தவன் என்னும் பொருளில் அறிஞரின் மிக்கான்’ என்றுள்ளார் கம்பர்.

வீடணனின் அறிவுரை, ஆங்கில நாட்டின் தலைமை அமைச்சராக இருந்த சர்ச்சிலின் வெற்றிகரமாகப் பின் வாங்குதல் என்னும் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது போல் தோன்றலாம். ஆனால், இவ்வாறு செய்தல் இராவணனுக்கு ஒரு வகையில் பெருமை தரலாம்; அதாவது - தவறு செய்தவன் தன் தவறை உணர்ந்து ஒத்துக்கொண்டு திருந்துவானே யாயின் முன்னிலும் பெருமதிப்பிற்கு உரியவன் என்னும் கோட்பாட்டின்படி இராவணன் உயர்ந்தவ னாவான்.

இப்பாடலில் உள்ள 'விட் டருளுதி' என்பது மிகவும் சுவைக்கத் தக்கது. உலகியலில் 'அருள் கூர்ந்து உதவுங்கள்’, அருள் கூர்ந்து கொடுங்கள் என்று கூறுவது போன்ற கண்ணியம் மிக்க வழக்காறாகும் இது. எளியவர் வலியோரையும், இளையவர் பெரியோரையும் பார்த்து இவ்வாறு முறையிடுதல் உண்டல்லவா? இதைத்தான் வீடணன் பணிவான வேண்டுகோள் பொருளில் செய்து உள்ளான்.

இராவணன் நகையாடல்

சீதையை இராமனிடம் சேர்க்கும்படி வீடணன் வேண்டியதைக் கேட்ட இராவணன், இரண்டு கைகளையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/95&oldid=1203458" இலிருந்து மீள்விக்கப்பட்டது