பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

 யாழ், தண்ணுமை, குழல், துடி முதலிய வாத்தியங்களின் பெயர்களையும் கூறலாம்.

(3) நாடகத் தமிழ் மொழிகள் தமிழ் நாட்கப் பகுதியின்கண் உபயோகிக்கப்பட்ட மொழிகளாம்; இதற்கு உதாரணமாக அல்லியம், கொடுகொட்டு, தோற்பாவை, குரவை முதலிய கூத்துகளின் பெயர்களையும், பிண்டி, பிணையல் எழிற்கை, தொழிற்கை, முதலிய அபிநயத்திற்குரிய மொழிகளையும், எழுதி, சோடிணை வேழம்பர், ஒட்டவனை, முதலிய சொற்களையும் கூறலாம்.


இலக்கணப் பிரிவு

பூர்வ இலக்கண ஆசிரியர்கள் தமிழ் சொற்கள், இயற்சொல், திரிசொல், திசைச் சொல், வட சொல் என்று நான்கு வகையாகப் பிரிந்திருக்கின்றனர்.

(1) இயற் சொல் என்பது செந்தமிழ் நாட்டில் வழங்கும் சொல்லாம். இதற்கு இலக்கணம் இயற் சொற்றுமே. செந்தமிழ் நிலத்து, வழக்கொடு சிவனித் தம் பொருள் வழாமையிசைக்குஞ் சொல்லே" என்று தொல்காப்பியம் கூறுகிறது. இதன்பொருள் செந் தமிழ் நிலத்தின் கண்ணே, வழங்குதலொடு பொருந்தி, அச்செந்தமிழ் நிலத்தும், கொடுந் தமிழ் நிலத்தும், கேட்போர்க்குத் தத்தம் பொருள் வழுவாமல் ஒலிக்கும் சொல்லாம்" என்றவாறு. உச்சிமேற்புலவர் கொள் நச்சினார்கினியர் இதற்கு "திரியின்றி இயல்பாகிய சொல்லாவன, கிலம், நீர், வளி, சோறு, கூழ் பால், மக்கள், மரம், தெங்கு, கழுகு, என்றும் தொடக்கத்தன” என்று உரை எழுதியுள்ளார்.

(1)திரிசொல் என்பது செய்யுளில் மட்டும் வழங்குதற் குரிய சொற்களாம். இயற்றமிழ் சொற்கள் செய்யுளில் உபயோகப்படும் பொழுது, எதுகைக்காகவோ, மோனைக்காகவோ, சீர் முதலியவற்றின் இலக்கணங்களுக்காகவோ, சற்று மாற்றப்பட்ட சொற்களாம்.

"ஒரு பொருள்குறித்த வேறு சொல்லாகியும்

வேறு பொருள் குறித்த ஒரு சொல்லாகியும்

இருபாற்றென்ப திரி சொற்கிளவி"

என்பது சூத்திரம். இதன் பொருள். "அவ்வியற் சொல் திரிந்த திரி சொல்லாகிய சொல்ல ஒரு பொருளைக் குறித்து வரும் பல