பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5镜 ஆதிகாலத்தில் சோழன், சேரன், பாண்டியன் என்று ஒரு அரசனுக்கு மூன்று பிள்ளைகள் இருந்ததாகவும்; அவர்கள் தனித்தனியே பிரிந்து போய் ஜெயித்து ஆண்ட நாடுகளுக்கு அப்பெயர்கள் வந்ததாகவும் முற்காலக் கதையொன்றுண்டு. சோழம், என்பது சோளம் என்னும் பதமாம், அந்த தானியம் அதிகமாய் விளையும் நாடு சோள பூமி அல்லது சோழ பூமியாம், என்று சில தமிழ் அறிஞர் நினைக்கின்றனர். சேர தேசம் என்பது கேரளதேச மென்பதின் மருவாம் ; கேரளம் என்ருல் தேங்காய், தென்னமரங்கள் அதிகமாய் விளையும் பூமியாத லால் அதற்கு கேரளம் என்று பெயர் வந்தது என்று டாக்டர் கால்ட் வெல் முதலியோர் அபிப்பிராயப் படுகின்றனர். பாண்டிய தேசத் திற்கு, முக்காலத்திய பெயர் பாண்டி நாடு என்பதாம். தென் பாண்டி நாடே ஒளி " என்பதைக் காண்க. சிலர், அர்ச்சுனன் தீர்த்த யாத்திரையில் இங்கு வந்து இத்தேசத்து அரச கன்னிகையாகிய சித்ராங்கதையை மணந்து பப்ருவாஹனன் என்பவனைப் பெற, அவன் மூலமாக பாண்டவ வம்சமானது இங்கு பரவியபடியால், பாண்டவ நாடு-பாண்டியநாடு என்ருயது என்று எண்ணுகின்றனர். இது அவ் வளவு உசிதமfகத் தோன்றவில்லை. மகா பாரதத்துக்கு முந்திய கால மாகிய ராமயண காலத்திலேயே இத்தேசமானது பாண்டிய தேசம் என்று வழங்கப்பட்டிருக்கிறது. பாண்டி என்னும் பதத்திற்கு, எருது, வண்டி, ஒர்வகைப் பண் முதலிய பல அர்த்தங்கள் உள. அவற்றில் எதினுல் இத்தேசத்திற்கு இப்பெயர் வந்தது என்று கிச்சயமாய்க் கூற முடியாது. இது இன்னும் ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயமாம். தற்காலம் செங்கற்பட்டு ஜில்லாவென்று வழங்கும் பூமிக்கும் அதைச் சுற்றிலுமுள்ள சில பாகங்களுக்கும் தொண்டை மண்டலம் என்று ஆதிகாலத்தில் பெயர் இருந்தது. ஒரு சோழ அரசனது புதல் வன், ஆதொண்டை என்பான், குறும்பர்களிடமிருந்து ஜெயித்து, வேளாளர்களைக் குடிபுகச் செய்து ஆண்ட நாடாகையால் இதற்குத் த்ொண்டை மண்டலம் என்று பெயர் வந்தது என்று தமிழ் அறிஞர் ஒப்புக்கொள்கின்றனர். ஆதொண்டை என்பது ஓர் வகைச் செடியைக் குறிக்கும். அதன் கொடியையோ, மலர்களையோ, கழுத்திற் சூடியபடி யால் அந்த அரச குமாரனுக்கு பிறகு ஆதொண்டைச் சக்கரவர்த்தி யென்று பெயர் வழங்கலாயிற்று, என்று புராணங்கள் கூறுகின்றன. தமிழ் நாட்டைச் சேர்ந்த மேற்கு தேசமாகிய மலையாளத்திற்கு ஐரோப்பியர் மலபார் என்று பெயர் வழங்கினர். இப்பதம் மலை