பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 பெற்றதாம். மலையாள தேசத்தில் தீயர் எனப்பட்ட ஜாதியார் இத் தேசத்திலிருந்துவந்தவர்களாக சிலர் எண்ணுகின்றனர். இலங்கையின் ஒரு பாகத்திற்கு யாழ்ப்பாணம் என்று பெயர். யாழ்ப்பாணர் குடி புகுந்த நாடாகையால் அப்பெயர் பெற்றதாம்; யாழ்ப்பாணர் என்ருல் யாழ் எனும் சங்கீதக் கருவியை வாசிப்பவர் என்று அர்த்தமாகும். இரண்டாயிர வருடங்களுக்குமுன் தென் இந்தி யாவிலிருந்து தமிழர்கள் இங்கு குடி புகுந்தனர் என்று சரித்திரம் கூறு கிறது. இங்கு குடியேறிய தமிழர்கள் மற்ற பாஷைகள் பேசுபவர்களு டன் அதிகக் கலப்பில்லாமல் வசித்துவந்தபடியால், தற்காலமும் இங்கு பேசப்படும் தமிழ் மொழியானது மிகவும் சுத்தமாயிருக்கிற தென்பது அனைவரும் அறிந்தவிஷயமே. குடகு என்பது தற்காலத்தில் கூர்க் (Corg) என்னும் ஆங்கிலப் பெயர் பெற்ற நாடாம். இந்நாடு மேற்கிலிருக்கிறபடியால் குடம் அல் லது குடதிசை என்பதினின்றும் பிறந்திருக்க வேண்டும். (குணதிசை, குடதிசை என்பதைக் காண்க). மைசூர் என்னும் பெயர் மஹிஷாசுரம் எனும் சமஸ்கிருத மொழியினின்றும் வந்ததாக எண்ணப்படுகிறது. மஹிஷம் என்ருல் எருமை என்று அர்த்தம். ஆதிகாலத்தில் இப்பிரதேசத்றிற்கு எருமை நாடு என்றே பெயர் இருந்தது. கொடுந் தமிழ் நாடுகளுள் எருமைநாடு என்று கூறப்பட்டிருக்கிறது. எருமைகள் நிறைந்த நாடு ஆதலால் அப்பெயர் வந்தது போலும்; தற்காலமும் இந்நாட்டிலுள்ள எருமை கள் மிகவும் புஷ்டியாக வளர்ந்து நன்ருகப் பால் கொடுக்கின்றன என் பதை கவனிக்கவும். ஆதிகாலத்தில் இங்கு ஓர்வித தமிழ் பாஷையே பேசப்பட்ட தென்பதற்குத் தடையில்லை, அப்பாஷை தான் நாளடை வில் மாறுதலடைந்து கன்னடமாயதென்பர் தமிழ் அறிஞர்.) குடி என்று முடியும் ஊர்களின் பெயர்கள் குடி என்ருல் குடியிருக்குமிடம் என்று பொருள் படும் (குடிசை, குடில் என்னும் மொழிகளை ஒத்துப் பார்க்க :) அன்றியும் தெலுங்கில் குடி என்ருல் தேவாலயம் என்று பொருள்படுவதைக் காண்க. இம் மொழியில் முடிகின்ற சில ஊர்களுக்கு உதாரணமாக பரமகுடி, ஆலக் குடி, கள்ளிக்குடி, பார்ப்பனக்குடி, விளாங்குடி, குத்தங்குடி, கற்குடி, தேவன்குடி, முதலியவற்றைக் காண்க.