பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2


சேரி என்பதும் அவ்வாறே முற்காலத்தில் தாழ்ந்த குலத்தவ வசித்த இடங்களுக்குப் பெயராக இருக்கலாம், இடைச்சேரி, பரை சேரி என்பவற்றைக் காண்க.


இச்சந்தர்ப்பத்தில் ஐவகை நிலங்களிலுள்ள ஊர்களுக்குப் பிரதியேகமாக பெயர்கள் இருந்ததாக இலக்கண நூல்களில் கூறியிருபது கவனிக்கத்தக்கதாம்.


முல்லை நிலத்தார்களுக்கு பாடி, சேரி, பள்ளி என்று பெ ராம், மழபாடி வியாசர்பாடி முதலியவற்றைக் காண்க,


நெய்தல் கிலத்தார்களுக்கு பாக்கம், பட்டினம் என்று பெய களாம். காவிரிப்பாக்கம், காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம் முதலியவற்றைக் காண்க. (கடற்கரையில் வசிக்கும் செம்படவர்களுக்கு பட்டினவர் என்று பெயர் இருப்பதைக் கவனிக்க)


குறிஞ்சி கிலத்தார்களுக்கு குறிஞ்சி என்றும், சிறுகுடி என்றும் பெயராம். பாஞ்சாலன்குறிச்சி, கள்ளிடைக்குறிச்சி முதலியவைகளைக் காண்க,


மருத நிலத்தார்களுக்கு. பாழி என்றும் பள்ளி என்றும் பெயர்களுண்டாம், அரதைப் பெரும்பாழியைக் காண்க.பாழி மூன்றும் என்று தேவாரத்தில் காண்க. நச்சிஞர்க்கினியர் மருத கிலத்தார்களுக்கு ஊர் என்றே பெயர் என்று கூறியுள்ளார்.


பாலை கிலத்தார்களுக்கு பறந்தலை என்று பெயர் என்று நச்சி ஒர்க்கினியர் கூறியிருக்கிறர்.


பட்டினம்-பட்டணம். பட்டி-பட்டணம் என்பது மேற் சொன்னபடி நெய்தல் நிலத்தாரைக் குறிப்பதாகும். பட்டணம் என்று தமிழ் மொழியாயின் பட்டிணத்திலிருந்து பிறந்திருக்கலாம், சம்ஸ்கிருத பதமாயின் பதணம் =அரணையுடையது, என்னும் பதத்தினின்றும், பிறந்ததாகும். கால்டுவெல் துரையவர்கள் பட்டணம் என்பது சமஸ்கிருதத்தில் உபயோகிக்கப்பட்டபோதிலும், தமிழ் மொழியே என்று அபிப்பிராயப் படுகின்றனர்; வடநாட்டில் பட்டணம் என்கிற பதம் சாதாரண வழக்கிலில்லே தமிழ் நாட்டில்தான் இது அதிகமாய் உபயோ கத்திலிருக்கிறது. சென்னப்பட்டணம், மதுரைப் பட்டணம், சதுரங் கப்பட்டணம் முதலியவற்றைக் காண்க. பட்டினம் என்பது சிறிய ஊரையும், பட்டணம் என்பது பெரிய ஊரையும் குறிக்குமோ என்று