பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கமேயாம் என்று ஊகிக்கலாம். தமிழர்களிடமிருந்து இங்கு குடியேறிய ஆரியர்கள் கற்ற வழக்கங்களில் இது ஒன்ருகும். பழய தமிழ் நூல் களில் புலிப்பற்ருலி என்று சொல்லப்பட்டிருக்கிறது. புலியினது பல்லாலாகிய அல்லது புலியின் பல்லைப் போன்ற தாலி என்று பொருள்படும். இதனுல் ஆப்பிரிக்கா முதலிய தேசங்களில் பூர்வீக ஜனங்களின் வழக்கம்போல, தமிழ்நாட்டிலும் முற்காலத்தில், ஒருவன் ஒரு பெண்ணை விவாகம் புரிவதென்ருல், தன் வீரத்தைக் காட்ட வேண்டுமென்பது அர்த்தமாகும். பூர்வீகத் தமிழன் புலியொன் றைக் கொன்று அதன் பல்லே அதற்கடையாளமாகத் தாலியாகத் தன் காதலியின் கழுத்தில் கட்டினன்போலும். தற்காலத்திலும் வேளாளர் களில் சில ஜாதியார் உபயோகிக்கும் தாலியானது புலிப் பல்லைப் போல் பொன்னுற் செய்யப்பட்டிருப்பதைக் காண்க. (29) குடவோலை இச்சொல் குடம் +ஓலை =குடவோலே என்ப தாம். குடத்திலிடப்பட்ட ஒலேத் துண்டு என்று பொருள்படும். முற் காலத்தில் தமிழ் அகத்தில் கோயில் காரியங்களைப் பார்க்கவோ, அல் லது வேறு ஏதாவது கிராமப் பொது வேலைகளைச் செய்யவோ, ஒருவ னைத் தேர்ந்து எடுக்கவேண்டியிருந்தால், அக்கிராமத்தார், கோயில் முற்றம் முதலிய இடங்களில் கூடி, ஒரு குடத்தை அங்கு வைத்து, ஒலைத் துண்டுகளில் ஒவ்வொருவனும்தான் அவ்வேலைக்கு விரும்பும் மனிதனுடைய பெயரை, எழுதி அக்குடத்திலிட, பிறகு அவ்வோலைத் துண்டுகளையெல்லாம் கணக்கிட்டுப் பார்த்து யாருடைய பெயர் அதிக மாக நியமிக்கப்பட்டிருக்கிறது என்று தேர்ந்து எடுக்கும் வழக்கம் பூர்வ காலத்திலேயே உண்டு என்பதை இப்பதம் நமக்கு நன்ருய்த் தெரிவிக்கிறது. தற்காலத்தில் இதை ஆங்கிலத்தில் வோட்பை பாலட் (Vote by Ballot) gróf Missir. - - (30) ஏனம் இம்மொழி தற்காலத்தில் எவ்விதமான பாத்திரத் திற்கும் உபயோகப்படுகிறது. திவாகரத்தில் இம்மொழிக்குப் பொருள், ஒலைக்கலம், அதாவது ஒலயினுற் செய்யப்பட்ட பாத்திரம் என்று கூறபப்ட்டிருக்கிறது. மிகவும் பூர்வீக காலத்தில் ஆதி தமிழர்கள் காடுகளில் வசித்துக்கொண்டிருந்தபொழுது, ஒலைகளைக் கட்டி பாத்தி ரங்களாக உபயோகப்படுத்திருக்க வேண்டுமென்பது திண்ணம், அவற்றிற்கு ஏனம் எனும் பெயர் இருந்தது. தற்காலத்திலும் வாழை இலை முதலியவற்றைக் கொண்டு தொன்னேகள் செய்து உபயோகிப்பு