பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 (38) துபாசி: இப்பதம் ஆதிகாலத்தில் தரகன் என்கிற அர்த் தத்தில் உபயோகப்பட்டிருக்கிறது. இதற்கு அகராதியில் ஐரோப்பி யரின் வியாபாரத்தில் இடை நின்றுதவும் தரகன் ” என்று அர்த்தம் செய்யப்பட்டிருக்கிறது. இப்பதத்திற்கு இந்த அர்த்தம் எப்படி வந்த தென்று சற்று ஆராய்வோம். துபாஷி என்பது இந்துஸ்தானி பதம். தோ-பாவி அல்லது துவி- பாவி - அதாவது இரண்டு பாஷை பேசு கிறவன் என்று பொருள்படும். ஆதிகாலத்தில் ஐரோப்பியர் தென் இந் தியாவிற்கு வந்து வர்த்தகம் செய்ய ஆரம்பித்தபோது அவர்களுடன் வாங்கல் கொடுக்கல் எனும் லேவாதேவி செய்பவர்களுடைய பாஷை அவர்களுக்குத் தெரியாமலிருந்தது; ஆகவே தமிழ்நாட்டுப் பாஷையும் ஆங்கிலமும் இரண்டும் தெரிந்தவர்கள். அவர்களுக்கிடையிலிருந்து, ஒருவர் பேசுவதை மற்ருெருவருக்குத் தெரிவித்து, வியாபாரத்தை முடித்துவைக்க வேண்டியதாயிருந்தது; ஆகவே இரண்டு பாஷை கற்றவர்கள் இத்தொழிலுக்கு ஏற்றவர்களாயிருந்தனர். தமிழில் ஷாவானது இல்லாதபடியால் துபாசி என்ருயது. மேற்கண்டபடி இருதிறத்தார்க்கும் வாங்கல் கொடுக்கல் முடித்துவைப்பதில், இருதிறத்தாரிடமிருந்து அவர்கள் ஊதியம் பெற்றபடியால் (Commission) துபாசி என்கிற பதத்திற்கு தற்காலம் தரகன் என்கிற அர்த்தம் கிடைக்கலாயிற்று, (39) நாமம் போடல் என்ருல் தற்காலம் ஏமாற்றல் என்று உபயோகப்படுகிறது; அவனுக்கு நாமம் போட்டான் என்ருல் அவனை ஏமாற்றிவிட்டான் என்று அர்த்தமாகிறது. இச்சொற்ருெடருக்கு இந்த அர்த்தம் வந்ததற்குக் காரணம் அடியில் வருமாருக இருக்கலாம் என்று ஊகிக்க இடம் கொடுக்கிறது. ஆதியில் தமிழ்நாட்டில் சைவர்களா யிருந்த சிலர் ராமானுஜாசாரியர் காலத்தில் வைஷ்ணவர்களாக மாற்றப் பட்டபோது அவர்கள் நாமம் அணியலாயினர். அக்காலத்தில் சைவர் கள் அவனுக்கு நாமம் போட்டுவிட்டார்கள் ' என்று வழங்கியிருக் கலாம். இதனின்றும் நாமம் போடல் என்ருல் ஏமாற்றல் என்கிற பொருள் வந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. இச்சந்தர்ப்பத்தில், இதைப்போன்ற, இதே அர்த்தத்தைத் தரும்படியான, தொப்பி போடு தல், குல்லாய்ப் போடுதல், என்கிற இரண்டு சொற்ருெடர்களையும் ஆராய்ந்து பார்க்க தொப்பி அல்லது டொப்பி என்பது சாதாரணமாக கிறிஸ்தவர்கள் அணியும் சிரோ பூஷணமாம். குல்லாய் என்பது மகம் மதியர்கள் அணிவதாம். ஒரு ஹிந்து மதத்தைச் சார்ந்தவன் கிறிஸ்தவ