பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 க்ளாம். குல்லாய் பாகை என்பது உர்து பதங்களாம். ஆகவே இவை களையெல்லாம் அணியும் வழக்கம் தமிழ்நாட்டில் பின் வந்ததாம். பூர் வத்தில் தமிழர்கள் அணிந்தது தலைகுட்டையென்பதைக் கவனிக்க; சிரோ பூஷணம் உஷ்ணிஷம் என்பவை சமஸ்கிருத மொழிகளாம். ஒன்பது என்பது ஆதியில் தொன்பது என்றிருந்ததாக எண்ணப் படுகிறது. தொள்--பத்து= ஒன்று குறையபத்து. தொண்ணுறு, தொள்ளாயிரம் என்பதைக் கவனிக்க. (58) ஆப்பம் என்பது அப்பம் எனும் தமிழ் மொழியினின்று வந்ததாகும். (59) ஆமவடை என்பது தமிழர்கள் சாதாரணமாக அருந் தும் பட்சணமாம். இது ஆமம்-வடை, அதாவது பச்சைத் தயிரில் இட்ட வடையென்று பொருள்படலாம். ஆமம் என்ருல் கடலைக்குப் பெயர் ஆகவே கடலையால் செய்ததாம் என்பாருமுளர், (60) கெடாரங்காய் என்பது கடு+காரங்காய் கடு என்றல் துவர்ப்பு. துவர்ப்புக் கிச்சிலிக்காய் என்ரும் நாரங்காய் என்பது நாரஞ்சி எனும் மேல்நாட்டு பதத்திலிருந்து வந்ததாம். சில வேடிக்கையான மொழிகள் (61) ஓடக்கால் இது சென்னையில் சில வருடங்களுக்குமுன் பாம்பஸ் பிராட்வே (Pophams Broadway) என்னும் வீதியருகி லுள்ள ஒரு வீதியின் பெயராயிருந்தது. இங்கு நெடு நாளாக மிகவும் இழிந்த விலை மாதர் வசித்து வந்தனர். ஒடக்கால் என்று ஒரு ஸ்திரி யைக் கூப்பிட்டால் அது ஒரு பெரிய வசையாயிருந்தது. இவ்விதிக்கு இப்பெயர் ஏன் வந்தது என்று பல வர்த்தமானப் பத்திரிகைகளில் பலர் தங்கள் அபிப்பிராயங்கள் எழுதினர் (ஒருவர் Why do you cal என்னும் ஆங்கிலத்தின் திரிபு என்றுகூட எழுதினர் ) இந்த தமிழ் பதத்தை ஆராய்ந்து பார்த்திருந்தால் இதன் உண்மையான அர்த்தம் வெளியாயிருக்கும். ஒடம் (அல்லது ஒடை)+கால். ஒடக் கால். ஒடம் என்ருல் படகு; கால் என்ருல் கால்வாய். படகுகள் விடும் கால்வாய் என்று பொருள்படும். (தற்காலமும் ராமநாதபுரம் ஜில்லாவில் ஓடைக்கால் என்கிற ஒரு கிராமம் இருப்பதைக் காண்க.)