பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-2.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கப்படுவனவாம். முக்கியமாக கலம்பகங்களில் அம்மான " பாடுங் கால் இன்றியமையாதனவாம். இதுவரையில் இதர பாஷைகளிலிருந்து தமிழ் பாஷைக்குள் புகுந்த பதங்களை கவனித்தோம். இப்பொழுது தமிழிலிருந்து இதர பாஷைகளுக்குட் புகுந்த சில மொழிகளை ஆராய்வோம்:- தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் முதலிய பாஷைகள் தமிழிலிருந்து பிறந்தனவாகையால், அவைகளிலுள்ள தமிழ்ப் பதங் களைக் குறித்து இங்கே எழுதுவது மிகையாம். (1) ஹீப்ரு பாஷை, இப்பாஷையில் அடியிற் கண்ட தமிழ் மொழிகள் குடியேறியுள்ளன : தந்தம், குரங்கு, இஞ்சி, மிளகு, அரிசி, சந்தனக் கட்டை, தோகை. - (2) கிரீக் பாஷை, இதிலுள்ள Aryze என்பது தமிழ் அரிசி என்னும் பதமாம். இதல்ை தமிழ்நாட்டிலிருந்து அரிசி கிரிஸ் (Grees) தேசத்திற்கு கொண்டுபோகப்பட்டதாக எண்ண இடமுண்டு. கிரீஸ் பாஷையிலுள்ள கார்ப்பிய (Karpea) என்பது கற்பூரம் எனும் தமிழ் மொழியினின்றும் பிறந்ததாம். х - (3) துர்க்கி பாஷை, இதிலுள்ள கான் (Khan) என்பது தமிழிலுள்ள கோள் என்னும் பதத்தினின்றும் வந்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. * (4) சமஸ்கிருத பாஷை, அடவி, ஆணி, (அச்சாணி), வளை யல், அக்காள், ஆத்தா, அம்மா முதலிய பதங்கள் தமிழிலிருந்து சமஸ் கிருதத்துட் புகுந்ததாக டாக்டர் கால்ட்டுவல் துரை எண்ணுகிருர். டாக் டர் குண்டர்ட் (Gundert) என்பவர் இதற்கு உதாரணமாக கீழ்வரும் பதங்களைக் குறிக்கிருர் - தமிழ் சமஸ்கிருதம் சண்பகம் Champaka பெட்டி Pitaka முத்து Mukthir - இரவு T&athri இன்னும் சிலர் முகிழ் என்னும் மொழியினின்றும் சமஸ்கிருத Mukulam பிறந்ததாக கினைக்கின்றனர். மீன் மீனம் . துலா துலாம்