பக்கம்:தமிழ் அமுதம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழந்தமிழ்ப் பெருங்குடியில் பிறந்த நாட்டார் இளமையில் தந்தையாரிடமே தமிழ்க்கல்வி பயின்றார், ‘சாவித்திரி வெண்பா' பாடிய சாமிநாத முதலியார் என்பவர் யோசனைப்படி மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் நடத்தி வந்த பிரவேச பண்டிதர் தேர்வுக்குப் படிக்கலானார்; அச்சிட்ட நூல்கள் கிடைக்காமையால் பலவற்றை எழுதிப் படித்தார்; அத்தேர்வில் முதல்வராகத் தேறினார். பின்னர் அவர் மேலும் முயன்று பால பண்டிதத் தேர்விலும் சிறப்புறத் தேறினார்; இறுதியில் பண்டிதத் தேர்விலும் முதல்வராகத் தேறி அதற்குரிய தங்கத் தோடாவைப் பரிசாகப் பெற்றார்,

அலுவல்

பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டார், கோவை மைக்கேல் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக அமர்ந்தார்; சில ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக அமர்ந்தார். அங்கு ஏறத்தாழ 25 ஆண்டுகள் பணியாற்றினார்; பிறகு அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் சில ஆண்டுகள் தமிழ் விரிவுரையாளராக இருந்து ஒய்வு பெற்றார் ; பின்பு கரந்தைப் புலவர் கல்லூரியின் தலைவராக இருந்தார் ; 1944ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் இறுதியில் இம்மண்ணுலக வாழ்வை நீத்தார்.

நூலாசிரியர்

இப் பெரியார் ஏறத்தாழ 40 ஆண்டுகள் தமிழ் உலகம் போற்ற வாழ்ந்தார். அக் காலத்தில் இவர் ஆராய்ந்து எழுதிய நூல்கள்பல. அவற்றுள் கள்ளர் சரித்திரம், சோழர் சரித்திரம், நக்கீரர், கபிலர், வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி, கட்டுரைத் தொகுதி இரண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/16&oldid=1459120" இலிருந்து மீள்விக்கப்பட்டது