பக்கம்:தமிழ் அமுதம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கின்றன. கணவனும் மனைவியும் பூசலிடுவதில்லை. அவர் களிடையே பிறந்து வளரும் பிள்ளை எப்படி இருக்கும் ? நல்ல முறையில் அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்து வளரும் அல்லவா ? அதே பிள்ளை பள்ளிக்குச் செல்லும் போது பல திறப்பட்ட பிள்ளைகளோடு பழக வாய்ப்பு உண்டாகிறது. அப்பிள்ளைகளுள் சிலர் நல்லவராக இருக்கலாம்; பலர் தீய பழக்க வழக்கங்களை உடையவராக இருக்கலாம். பெற்றாேர் மிகுந்த கவலை எடுத்துக்கொண்டு தம் பிள்ளை நல்ல மாணவரோடு பழகவே இடந்தருவர். இத்தகைய சூழ்நிலை அமைப்பால், பிள்ளை நன்னெறியிலேயே வளர இடம் உண்டாகிறது.

ஒரு தந்தை குடிகாரன். அவன் ஓயாது மனைவியை அடித்துத் துன்புறுத்துகிறான்; தீய சொற்களைப் பயன் படுத்துகிறான். தாயும் கணவனைக் கண்டவாறு வைகிறாள். இந்தக் குடும்பத்தில் வளரும் பிள்ளை பெற்றோர்களது பாதுகாப்பை இழக்கிறது. இளஞ் செடிக்கு ஏற்ற எரு இட்டு உரிய காலத்தில் தண்ணிர் விட்டு நல்ல காற்றும் வெளிச்சமும் உள்ள இடத்தில் வைத்தால்தான், அது நன்கு வளர முடியும். அது போன்றதே பிள்ளை வளர்ப்பும். பிள்ளைப் பருவத்திற்கேற்ற குடும்ப நிலையும் சூழ்நிலையும் அமையவேண்டும். நாள்தோறும் வீட்டில் தன் பெற்றாேரே ஒருவரை ஒருவர் வைதுகொண்டு சண்டை இட்டுக்கொள்ளுதல், பிள்ளையின் அறிவையும் வளர்ச்சியையும் மிகுதியாகத் தாக்கிவிடும். அந்த நிலையில் அப்பிள்ளை தீய பிள்ளைகளுடன் சேர்ந்தால், எளிதில் கெட்டு விடுதல் இயற்கை.

தந்தை மட்டும் படித்தவன்; தாய் படியாதவள். தந்தை பிள்ளையைக் கண்டித்து நன்முறையில் வளர்க்க எண்ணுகிறான். தாய் தன் அறியாமையினால் பிள்ளைக்குச் செல்லம் கொடுக்கிறாள். தாயின் செல்லத்தால் பிள்ளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/21&oldid=1459125" இலிருந்து மீள்விக்கப்பட்டது