பக்கம்:தமிழ் அமுதம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாளடைவில் கெட்டுப்போய் விடுகிறான். இவ்வாறு குடும்பத்தில் கெட்டு வளரும் பிள்ளை சூழ்நிலையாலும் கெட்டுவிடுகிறான்.

பெற்றாேர் படியாதவர்; ஆனால் நல்ல ஒழுக்கமுடையவர்; பிள்ளையை அன்போடு வளர்க்கின்றனர்; பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்புகின்றனர். பிள்ளை தீய மாணவருடன் பழகுகின்றான்; அவர்கள் தூண்டுதலால் வீட்டிலுள்ள பணத்தைத் திருடுகிறான். இவ்வாறு அவன் சிறு சிறு குற்றங்களைச் செய்து, நாளடைவில் பெரிய குற்றவாளி ஆகிறான்.

பிள்ளை வளர்ப்பில் பெற்றாேர் பங்கு முக்காற் பங்காகும். பிள்ளையை வீட்டில் நன்கு வளர்ப்பதும் வெளியில் நல்ல சூழ்நிலையை அமைத்துக் கொடுத்தலும் பெற்றாேர் கடமையாகும். இந்த இரண்டில் எது தவறினாலும், பிள்ளை வளர்ப்புக் குறைவுடையதாகும்.

பெற்றாேர் நிலைமை

நமது நாட்டில் பெற்றாேருள் பெரும்பாலர் கல்வியறிவு இல்லாதவர்கள், மிகுந்த ஏழைகள்; வசதியற்ற குறுகிய இல்லங்களில் வாழ்பவர்கள். இத்தகையோர் கூடிவாழும் இடமும் பலவசதிகள் அற்றதாக இருக்கின்றது. போதிய கல்வி அறிவும் நாகரிகப் பழக்க வழக்கங்களும் இல்லாமையால், அம்மக்களிடம் நல்ல பேச்சு வார்த்தைகள் மிகுதியாக இல்லை; தீய சொற்களை— பலர் முன் கூறத்தகாதவற்றை — எளிதாகப் பேசுகின்றனர். இந்தச் சூழ்நிலையில் வளரும் பிள்ளைகளும் இளமை முதலே இச் சொற்களைப் பேசுவதைக் கேட்கின்றனர். சமுதாயத்தில் சான்றோர்கள் இருந்து இம் மக்களைச் செம்மைப் படுத்தாமையால், இவர்கள் வாழையடிவாழையாக இப்படியே பேசியும் வீண் சண்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/22&oldid=1459126" இலிருந்து மீள்விக்கப்பட்டது