பக்கம்:தமிழ் அமுதம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

ரால் சிறைப்படுத்தப்பட்டனர். இதனை அறிந்த மங்கம்மாள் அரசாங்கப் புலவர்களை அழைத்து, செளராஷ்டிரர் பூணூல் அணிதல் முறையாகுமா என்பதை ஆராய்ந்து சொல்லுமாறு ஆணையிட்டார். அவர்களின் முடிவுப் படி, செளராஷ்டிரர் பிராமணரைப்போலப் பூணூல் அணியலாம் என்னும் உரிமையைப் பனையோலையில் எழுதி அரசாங்க முத்திரையுடன் அரசியார் கொடுத்தார். (சென்னை மக்கள் அறிக்கை, 1901).

முடிவுரை

செளராஷ்டிரர் அடக்கமுள்ளவர், சமயப்பற்றுடையவர்; பிறரிடம் அன்புள்ளவர்; விழாக்களிலும் வேடிக்கைகளிலும் விருப்பம் உள்ளவர். இவர் முதலில் சூரிய வணக்கத்தை மேற்கொண்டவராக இருந்தனர். (செளராசூரியன்). இவருள் சைவரும் உண்டு; வைணவரும் உண்டு; மாத்வரும் உண்டு.

செளராஷ்டிரருள் சமூகக் கட்டுப்பாடு உண்டு, சமூக நலனுக்கு உழைக்கும் கழகங்கள் உண்டு. ஆயினும் பரம ஏழைகளாக இருக்கும் செளராஷ்டிரர்களே மிகுதியாக இருக்கின்றனர். செல்வர்கள் இவர்களை உயர்த்த மேலும் பாடுபடவேண்டும்; ஏழைத் தொழிலாளர்களின் வறுமையை ஒழிக்கப் பாடுபடவேண்டும். ஒரு சில வளமனைகளும் (செல்வரையும்), நூற்றுக்கணக்கான குடிசைகளையும் (ஏழைகளையும்) காணும்போது, இச் சமூகச் செல்வர்கள் மேலும் மிகுந்த கவலைகொண்டு, ஏழைகள் நிலையை உயர்த்தியே தீரவேண்டும் என்று கூறுதல் தவறாகாது. தொழில் துறையில் பண்பட்ட அறிவைப் பெற்றுள்ள இவ்வினத்தாரைத் தமிழ் மக்கள் பெரிதும் மதிக்கின்றனர் என்பது மகிழ்ச்சிக்குரியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/34&oldid=1459153" இலிருந்து மீள்விக்கப்பட்டது