பக்கம்:தமிழ் அமுதம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

யாளர் ஆட்சிக்கு உட்பட்டதால் தமிழ்ப்புலவர்கள் பரணி போன்ற நூல்களையோ அரசர் தூண்டுதல்மீது பெரிய காவியங்களையோ பாட வசதி இல்லை. தமிழ்ப்பெரும் புலவர்களை ஆதரிப்பாரில்லை. அடிமைப்பட்ட நாட்டில் புலவர் பெருமிதம் ஒழிந்தது. அவர்கள் ஊரடங்கி வாழலாயினர். அப்பொழுது கோவில்கள் தாம் ஊர் மக்களுக்கு நடுவிடம்— உயிர்நாடி. ஆதலால் புலமை எழுச்சி கொண்ட புலவர்கள் மன்னரைப்பற்றிப் பாட வழியின்றி, இறைவனைப் பற்றிப் பாடலாயினர். இம் முயற்சியில் எழுந்தவையே திருவிளையாடற் புராணம் போன்ற தல புராணங்கள். வடமொழியில் எழுதப்பெற்ற தல புராணங்கள் — கந்த புராணம் போன்றவையும் — தமிழில் பாடப்பெற்றன.

புராணங்களில் கூறப்பட்டுள்ள கதைகளுள் பெரும்பாலான கற்பனையின்பாற்படும். ஆயினும் அவற்றில் இலக்கியச் செல்வம் மிகுந்து இருக்கிறது. பின் நூற்றாண்டுகளின் நகரங்களின் அமைப்பு, நாடுகளின் நிலைமை, மக்களுடைய நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், ஆடையணிகள், கலைகளின் நிலைமை இன்ன பிறவும் இப் புராணங்களில் அந்தந்த நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களால் குறிக்கப்பட்டுள்ளன. கந்த புராணம் ஏறத்தாழக் கி. பி. 16-ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டது எனலாம். அதன்கண் தெய்வயானையின் திருமணச் செய்தி காணப்படுகிறது. திருமணத்தின் போது அவ்வம்மை அணிந்துகொண்ட நகைகளின் பெயர்கள் கந்தபுராணத்தில் இடம் பெற்றுள்ளன. அவை புலவர் வாழ்ந்த காலத்து நகைகள் என்பதை நாம் உணரலாம். இவ்வாறு ஒவ்வொரு புராணத்திலும் குறிப்பிடத்தக்க செய்திகள் சில நமக்குக் கிடைக்கின்றன. இச் செய்திகளோடு தமிழ்ச் செய்யுட்களைப் பற்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/63&oldid=1459182" இலிருந்து மீள்விக்கப்பட்டது