பக்கம்:தமிழ் அமுதம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

3. பொதுமக்களின் கல்வி நிலை, ஆடவர் பெண்டிர் இயல்புகள்

4. சமயநிலை

5. மறக்குடி மக்களின் இயல்புகள்

6. நாட்டினுடைய விளைபொருள்கள், செய் பொருள்கள்

7. உள்நாட்டு வாணிகம், கடல் வாணிகம் - அயல் நாட்டு உறவு

8. கலை வளர்ச்சி

9. நாகரிகம்

10. பண்பாடு

2. நீதி நூல்களால் அறியப்படுவன

திருக்குறள் போன்ற நீதி நூல்கள் அரசியலைப் பற்றியும், சமுதாயத்தைப் பற்றியும், இல்வாழ்க்கை பற்றியும் இம் மூன்றுக்கும் தனி மனிதனுக்கும் உள்ள தொடர்புபற்றியும் பல விவரங்களைத் தெரிவிக்கின்றது ; ஒவ்வொருவனும் சமுதாயத்தில் நல்ல குடிமகனாக வாழ்வதற்கு வேண்டும் விதிகளை வரையறுத்துக் கூறுகின்றது. இவ்வாறே நாலடியார் பழமொழி முதலிய நீதி நூல்களும் சிலசில நெறி முறைகளைக் கூறுகின்றன. இவையாவும் மனிதனை நன்னெறிப்படுத்த எழுந்தவை. இவை அற நூல்கள் என்றும் சொல்லப்பெறும். (அறம் - ஒழுக்கம்) இவை எல்லாச் சமயத்தார்க்கும் ஏற்ற பொது நூல்கள்.

3. காவிய நூல்கள்

உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ நடந்த அல்லது நடந்ததாக நம்பப்பட்ட ஒரு நிகழ்ச்சியைப் புலவன் தன் புலமைத் திறத்தால் பல்வேறு காட்சிகளைச் சேர்த்து மனித உள்ளத்திற்குப் பொருந்துமாறு அமைத்து இடை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/69&oldid=1459188" இலிருந்து மீள்விக்கப்பட்டது