பக்கம்:தமிழ் அமுதம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

களையும் வழக்காறுகளையும் பிறவற்றையும் இனிது உணர்த்துகின்றன. யாப்பருங்கல விருத்தியுரை அவ்வுரையாசிரியர் காலத்திலிருந்த யாப்பிலக்கண நூல்களின் பெயர்களையும் சூத்திரங்களையும் யாப்பிலக்கண வளர்ச்சியையும் வேறு பல உண்மைகளையும் தெரிவிக்கின்றது.

கலை நூல்களால் அறியப்படுவன

பழந்தமிழ் நூல்களுள் ஓவியம் சிற்பம்போன்ற கலைகளுக்கென்று அமைந்த தனி நூல்கள் இல்லை. காலப் போக்கில் அவை அழிந்துவிட்டன. பின் நூற்றாண்டுகளில் செய்யப்பட்ட பரதசேனாபதீயம் முதலிய ஒன்றிரண்டு நூல்கள் நடனக்கலையைக் குறிக்க இருக்கின்றன. அவற்றைச் செம்மையாகப் படித்து அக்கலையின் சிறப்பை நாடறியச் செய்யும் நன்மக்கள் இக்காலத்தில் இல்லை. இந்த நிலையில் புலமையும் ஆராய்ச்சியும் ஓரளவு பெற்றுள்ள தமிழறிஞர்கள் நூல்களையும், பழங்காலக் கட்டடங்களையும், கல்வெட்டுக்களையும் ஆராய்ந்து ஓவியம், சிற்பம், இசை, நடனம், நாடகம் பற்றி ஓரளவு விளக்கி நூல்களை வரைந்துள்ளனர். அவற்றைக்கொண்டே பண்டைத் தமிழகத்துக் கலைகளைப்பற்றிய செய்திகளை நாம் ஓரளவு அறிகின்றாேம்.

*

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/79&oldid=1459198" இலிருந்து மீள்விக்கப்பட்டது