பக்கம்:தமிழ் அமுதம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புறமும் தட்டக்கூடிய ஒரு தோற்கருவி.இவர்கள் ‘தம்பிராட்டி' முதலிய பெயர்களைப் பெண்களுக்கு வழங்குகின்றனர்.

“கம்பர் என்னும் பட்டம் உடையவர் உவச்சர் என்றும், உவச்சப்பிள்ளை என்றும் அழைக்கப்படுகின்றனர். “ஸ்ரீவைகுண்டத்தில்" உவச்சர் தெரு இருக்கின்றது. திருநெல்வேலி மாவட்டத்திலும், கன்னியாகுமரிப் பகுதியிலும் உவச்சர் வாழ்கின்றனர். சுந்தரராச கம்பர், கோமதிக் கம்பர், லேவனக் கம்பர், கந்தக் கம்பர், மாடசாமிக் கம்பர், இலட்சுமணக் கம்பர் என உவச்சர் பெயர்கள் வழங்குகின்றன. கன்னியாகுமரியில் சுடலையாண்டிக் கம்பர் சிறந்த நாதசுர வித்துவானாவர். .

‘காளிகோவில் பூசாரிகளாக இருந்த உவச்சர் நாதசுரப் பயிற்சி பெற்று வாசிக்கின்றனர். இவர்கள் வேறு; இசை வேளாளர் என்பவர்கள் வேறு. வேதம் ஓதிக்கொண்டிருந்த ஐயர் சங்கீத வித்துவானக இருப்பது போலக் காளி கோவில் பூசாரிகளாக இருந்த கம்பர் மரபினர், நாதசுர வித்துவான்களாக இருக்கின்றனர்.

“இக் கம்பர் மரபினர் தமிழ் இலக்கண இலக்கியங்களில் புலமை பெற்றிருந்தனர். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் அவ்வாறு புலமை பெற்றிருந்த சிலர் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்த சமீந்தார்களிடம் சிறப்புப் பெற்றனர்.”

கம்பர் உவச்ச மரபினர்

இவ்விவரங்களை நோக்க,கம்பர் என்பது இயற்பெயர் அன்று என்பதும்,காளி கோவில் பூசாரிகளைக் குறித்து வந்தப் பொதுப் பெயர் என்பதும் தெளிவாகும்.சோழ நாட்டுப் புலவர் 'சோழர்’ என்று பெயர் பெற்றதில்லை :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/9&oldid=1459108" இலிருந்து மீள்விக்கப்பட்டது