பக்கம்:தமிழ் இனம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

i06 - தமிழ் இனம்

நின்றாள். இந்திரன் சிவனை வணங்காது செருக்குடன் நடந்துகொண்டான். சிவன் சினந்து, அவனே ஒரு குகைக்குள் தள்ளிவிட்டான். அக் குகையில் வேறு இந்திரர் நால்வர் இருந்தனர். சிவபிரான் அவர்கள் ஐவரையும் வெளியே அழைத்து, நீங்கள், ஐவரும் நிலத்தில் பிறந்து இவளுக்கு என்று கட்டளையிட்டான். அதன்படி இந்திரர் ஐவரும் இப்பாண்டவராகப் பிறந்தனர். இந்திரசேன பாஞ்சாலியாகப் பிறந்தாள். ஆதலால் பாண்டவர் பாஞ்சாலியை மணந்துகொள்வதில் தவறில்லை. ’’

இவ்வரலாறு கேட்ட பின்பு துருபதன் தன்மகளை ஐவருக்கும் மணமுடித்தான். இச் செய்தி வியாச பாரதத்திலும் வில்லி பாரதத்திலும் காணப்படுகிறது.

உலக நடைமுறைக்கு மாறாக (இச் செய்தியில் காணப்படும்) முனிவன் செயலையும், சிவன் வரம் தந்த வரலாற்றையும் ஆராய்ச்சியாளர் சமயப் புனைந்துரை (Mythology) என்று ஒதுக்கிவிடுவர். பாஞ்சாலி ஐவர்க்கு மனைவியாவாள் என்பது இவ் வரலாற்றால் அறியப்படும் உண்மையாகும். இங்ஙனம் ஒருத்தி ஒரே சமயத்தில் பலரை மணந்து வாழ்தல் இலக்கியம் கண்ட உண்மையா ? வழக்கில் உண்டா? என்பன கேட்கத்தகும் கேள்விகள் அல்லவா? இவற்றுக்கு விடை காண்டல் பாஞ்சாலி பற்றிய சிக்கலைத் தீர்க்க உதவி புரியும்.

இலக்கியச் சான்று

‘இந்தோ-ஆரிய மக்களிடம் ஒரு காலத்தில் ஒருத்தி ஒரே சமயத்தில் பலரை மணந்து வாழ்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/103&oldid=1359748" இலிருந்து மீள்விக்கப்பட்டது