பக்கம்:தமிழ் இனம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110 தமிழ் இனம்

உடனே திருமணம் முடிவு செய்யப்படும். பின்பு பிள்ளைகளின் பெற்றாேர் தம் இனத்தவரோடு பெண் ணுக்கு ஆடை வழங்குவர் அச்சாரப் பணமும் தருவர். குறித்த நாளில் மணமக்களாகிய சகோதரர் அனைவரும் மணக்கோலத்துடன் கையில் தாழங்குடை ஏந்தி மணமகள் வீட்டிற்கு ஊர்வலமாக வருவர் அங்குப் பெண்ணின் பெற்றாேராலும் மற்றாேராலும் வரவேற்கப்படுவர். பின்னர் மணப்பெண்ணும் மணமக்களும் மணப்பந்தலில் வரிசையாக அமர்வர். பெண்ணின்பெற்றாேர் அவர்களுக்குப் பழங்களையும் சர்க்கரையையும் வழங்குவர். இச் சடங்கு மதுரம் கொடுக்கல் எனப் பெயர் பெறும். பின்னர் அனைவரும் மணமக்கள் இல்லம் சென்று விருந்துண்பர். அப்பொழுது அங்கு மணமகளுக்கும் மணமகனுக்கும் பால் வழங்கப்படும். இச்சடங்கு பால் கொடுக்கல்’ என்று பெயர்பெறும். திருமண நாளன்று மூத்த சகோதரனே பெண்ணுடன் வாழ்வான். பிற சகோதரர்கட்குத் தனித்தனி நாள் ஒதுக்கப்படும்.

இக்கணவருள் எவனேனும் ஒருவன் எக்காரணம் கொண்டேனும் வேறொரு மனைவியைக் கொண்டு வருவானாயின், அவள் அவனுடைய பிற சகோதரர்கட்கும் மனைவியாக உரிமை உடையவ ளாவாள். “

(5) கி. பி. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாயர்களின் வாழ்க்கையைக் கவனித்த சீசர் பிரெடரிக் என்ற வெனிஸ் நகர வணிகர் (இத்தாலியர்) கீழ் வருமாறு எழுதியுள்ளார் :

6 Ibid. Vol. III, p p. 130-13].

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/107&oldid=1359770" இலிருந்து மீள்விக்கப்பட்டது