பக்கம்:தமிழ் இனம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐவருக்கு மனைவி 111

“ நாயர் பலர்கூடி ஒரு நாயர் பெண்ணே மனைவியாகக் கொள்கின்றனர். அவருள் ஒருவன் அவள் வீட்டுக்குச் சென்றதும், வீட்டின் வெளிக்கத வண்டை தன் வாளையும் செருப்பையும் தன் வருகைக்கு அடையாளமாக வைத்துவிட்டு உள்ளே செல்வான். இவற்றைக் கண்ட பிற கணவன்மார் அவ்வீட்டின்முன் வாரார். ”

கி. பி. 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இப்பகுதியைப் பார்வையிட்ட ஹாமில்ட்டன் என்பவர் பின்வருமாறு எழுதியுள்ளார் :

  • * ஒருத்திக்குப் பன்னிரண்டு கணவர் வரை இருக்கலாம். ஆனால் ஒவ்வொருவரும் குறித்த நாட்களில் அவளுடன் வாழ்வர் ; அவளுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுப்பர். குழந்தை பிறந்ததும் அக்குழந்தை எவருக்குப் பிறந்தது என்று தாய் கூறுகிறாளோ, அந்தக் கணவன் அக்குழந்தையைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வான். ”

கி. பி. 18-ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் வந்த ப்ரோஸே என்ற யாத்திரிகர் பின்வருமாறு கூறியுள்ளார் :

“ நாயர்களிடம் விநோதமான ஒரு வழக்கம் இருந்து வருகிறது ; அஃதாவது, ஒருத்தி பலருக்குப் பொதுமனைவியாக இருத்தல் என்பது. அக்கணவர் பலருள் பொருமையோ பூசலோ இல்லாமல் இருத்தல் பாராட்டத்தக்கது. ஒருத்திக்கு இத்துணையர் தாம் கணவராக இருத்தல் வேண்டுமென்ற சட்டம் இல்லை. நான் பார்த்தவரையில் ஒருத்திக்கு அறுவர் அல்லது எழுவர் கணவருக்குமேல் இல்லை.” .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/108&oldid=1359774" இலிருந்து மீள்விக்கப்பட்டது